Saturday , April 17 2021
Breaking News
Home / உலக செய்திகள் / இங்கிலாந்து / IND vs ENG இன்று தொடங்குகிறது முதல் ஒரு நாள் போட்டி!

IND vs ENG இன்று தொடங்குகிறது முதல் ஒரு நாள் போட்டி!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி இன்று தொடங்க உள்ளது..!!

புனே,
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரையும் டி 20 தொடரையும் முடித்துள்ளது. டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும் டி 20 தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்தியா வென்றுள்ளது. இந்நிலையில் இன்று புனேவில் முதல் ஒரு நாள் போட்டி தொடங்க உள்ளது.

டெஸ்ட் மற்றும் டி20 தொடரை இழந்த இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரையாவது கைப்பற்ற வேண்டும் என்ற ஆவலோடு இருக்கிறது. பகலிரவு போட்டியான இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது. 

ஒருநாள் போட்டிகளில் ஷிகார் தவானும் ரோஹித் ஷர்மாவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவார்கள் என கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் வழக்கமாக லிமிடெட் ஓவர் போட்டிகளில் மூன்றாவது வீரராகக் களமிறங்குவார். ஆனால் சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டி 20 தொடரில் தொடக்க வீரராகக் களமிறங்கிய 80 ரன்கள் சேர்த்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்நிலையில் போட்டி முடிந்தபின்னர் பேசிய அவர் ‘இனிமேல் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கலாம் என இருக்கிறேன். ரோஹித்துடன் விளையாடுவது சிறப்பாக இருக்கும். ஐபிஎல் தொடரிலும் ஓபனிங்க்தான் விளையாட உள்ளேன். நான் அல்லது ரோஹித் களத்தில் இருந்தால் இளம் வீரர்கள் நம்பிக்கையுடன் உணர்வார்கள்’ எனக் கூறியுள்ளார். ஆனால் ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை தவான்தான் தொடக்க ஆட்டக்காரராக ரோஹித்தோடு விளையாடுவார் என கூறியுள்ளார். மேலும் கூறிய அவர் ‘அவர்கள் இருவரும் கடந்த ஆண்டுகளில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்’ எனக் கூறியுள்ளார்.

Thanks to Dailyhunt

About Admin

Check Also

தீவிரமாகும் கரோனா: புதுச்சேரியில் கல்லூரித் தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தீவிரமாகும் கரோனா: புதுச்சேரியில் கல்லூரித் தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு கரோனா தொற்றின் வேகம் காரணமாகப் புதுச்சேரி கல்லூரிகளில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster