இங்கிலாந்து (India vs England) அணிகள் மோதும் இறுதி மற்றும் ஐந்தாவது டி 20 போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது..!! 
அகமதாபாத்: இந்தியா – இங்கிலாந்து (India vs England) அணிகள் மோதும் இறுதி மற்றும் ஐந்தாவது டி 20 போட்டியில் வெற்றி பெரும் அணி தொடரை கைப்பற்றும். இரண்டு அணிகளும் ஒரு வெற்றி, ஒரு தோல்வி என மாறிமாறி நான்கு போட்டிகளில் மோதி, இரண்டு வெற்றிகளை இருஅணிகளும் பதிவு செய்துள்ளன. அதாவது இந்திய அணி முதல் மற்றும் மூன்றாவது போட்டிகளில் தோல்வியடைந்தனர். ஆனால் இரண்டாவது மற்றும் நான்காவது போட்டிகளில் வென்றது. கடந்த வியாழக்கிழமை நடந்த 4 வது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறுவது போல் தோன்றியது. இருப்பினும், சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் இன்னிங்சை விளையாடிய சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav), அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து இந்தியாவை வெற்றியின் பாதையில் தள்ளினார்.
இந்தியாவின் இரண்டு வெற்றிகளிலும், நடப்பு ஐபிஎல் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த இரண்டு வீரர்களின் பங்கு முக்கியமானது. ஒன்று – இஷான் கிஷன் (Ishan Kishan), அடுத்து சூர்யகுமார். இவர்களின் ஆட்டம் இங்கிலாந்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஐந்தாவது டி-20 போட்டி நடக்கும் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பதால், ஏராளமான ரன்கள் அடிக்க வாய்ப்புள்ளது. அகமதாபாத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் (Narendra Modi Stadium) வானிலை வெப்பமாகவும் ஈரப்பதமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில் டாஸ் ஒரு முக்கிய பங்கை வகிக்கும் மற்றும் போட்டியின் வெற்றியை தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாக இருக்கும்
IND vs ENG T20I 4: இந்திய வெற்றிக்கு வெளிச்சம் தந்த சூர்யகுமார், பாண்டியா
இந்தியா – இங்கிலாந்து 5வது டி-20 போட்டி எங்கு, எப்படி பார்ப்பது?
தொலைக்கட்சி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் (Star Sports Network)
ஆன்லைன் லைவ் ஸ்ட்ரீமிங்: டிஸ்னி (Disney+ Hotstar) + ஹாட்ஸ்டார், ஜியோ டிவி (JIO TV)
இந்தியா – இங்கிலாந்து மோதும் ஆடுகளம் யாருக்கு சாதகமாக இருக்கும்?
ஐந்தாவது மற்றும் இறுதி டி-20 ஐக்கான ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் உதவும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஆட்டம் ஆரம்பிக்கும் போது, பனி காரணி பேட்டிங் செய்ய எளிதாக இருக்கும். மீண்டும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். டாஸ் வெல்லும் அணியின் கேப்டன் முதலில் எதிர் அணியை பந்து வீச சொல்வார்.
5வது டி-20 போட்டி டாஸ் எத்தனை மணிக்கு போடப்படும்:
டாஸை வெல்லும் கேப்டன் பேட் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுவதால், டாஸ் வெல்வது இரண்டு கேப்டன்களும் முக்கியமானது. என்று எதிர் பார்க்கப்படுகிறது. டாஸ் மாலை 6:30 மணிக்கு போடப்படும்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளின் இந்த 11 பேர் பங்கேற்கலாம்:
இந்தியா: ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர், ஹார்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஷார்துல் தாக்கூர், புவனேஷ்வர் குமார், ராகுல் சாஹர்.
இங்கிலாந்து: ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோ, ஈயோன் மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், சாம் குர்ரான், கிறிஸ் ஜோர்டான், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், மார்க் வூட்.