Saturday , April 17 2021
Breaking News
Home / அரசியல் / முக கவசம் அணியாவிட்டால் தேர்தல் பிரசாரம் செய்ய தடை?

முக கவசம் அணியாவிட்டால் தேர்தல் பிரசாரம் செய்ய தடை?

முக கவசம் அணியாவிட்டால் தேர்தல் பிரசாரம் செய்ய தடை..!!

புதுடில்லி: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், முக கவசம் அணியாத, கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள், வேட்பாளர்களை, தொடர்ந்து பிரசாரம் செய்வதற்கு தடை விதிக்கக் கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

டில்லியைச் சேர்ந்த, டாக்டர் விக்ரம் சிங், டில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தற்போது, தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட, ஐந்து மாநில சட்ட சபைகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதில் டில்லி உட்பட, பல பகுதிகளில் இருந்து கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பிரசாரத்துக்கு செல்கின்றனர். அவர்களை பார்ப்பதற்காகவும், பேச்சை கேட்பதற்காகவும், மக்கள் அதிகளவில் கூடுகின்றனர்.

இதனால், கொரோனா வைரஸ் பரவுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.அதிலும், நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் கட்சி வேட்பாளர்கள், முக கவசம் அணிவதில்லை; அது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இவ்வாறு, முக கவசம் அணியாமல் பிரசாரம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் பிரசாரம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Thanks to Dinamalar

About Admin

Check Also

தீவிரமாகும் கரோனா: புதுச்சேரியில் கல்லூரித் தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தீவிரமாகும் கரோனா: புதுச்சேரியில் கல்லூரித் தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு கரோனா தொற்றின் வேகம் காரணமாகப் புதுச்சேரி கல்லூரிகளில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster