வெற்று அறிவிப்புகளை வெளியிடும் முதல்வர் : ஸ்டாலின் தாக்கு..!! 
சென்னை: கடைசி நேரத்தில் முதல்வர் பழனிசாமி வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு வருவதாக தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.காஞ்சிபுரத்தில், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாவது:
சென்னை அருகே உள்ள நீர் நிலைகளையே தூர்வாரவில்லை. அப்படி இருக்கும் போது தமிழகம் முழுவதும் எப்படி தூர்வாரியிருப்பார்கள்? அரசு கஜானாவை தான் அதிமுக.,வினர் தூர்வாரி உள்ளனர். மக்களின் எழுச்சியை பார்க்கும் போது, 234 தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி தான் வெற்றி பெறும் என நினைக்கிறேன்.
பிரதமர் என்பதை மறந்து தரம் தாழ்ந்த விமர்சனத்தை மோடி வைத்துள்ளார். தமிழகத்தில் ஒரு எம்.பி., எம்.எல்.ஏ., கூட இல்லாத பா.ஜ.,திமுகவை பலம் இழந்தது என்கிறது.சட்டசபையில் பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக திமுக செயல்பட்டு வருகிறது.வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதாக அதிமுக அரசு அறிவித்து இருப்பது வெற்று அறிவிப்பு தான். இதனை நாம் தான் செயல்படுத்த உள்ளோம். கடைசி நேரத்தில் முதல்வர் பழனிசாமி அறிவிப்புகளை வெளியிடுகிறார்.
முதல்வர் பழனிசாமியால் அரசாணை கூட வெளியிட முடியாது.திமுக ஆட்சிக்கு வந்ததும் வன்னியர்களுக்கு உண்மையான உள் ஒதுக்கீடு அமலாகும். அணையும்விளக்கு பிரகாசமாக எரியும். லோக்சபா தேர்தலின் போது, விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக அறிவித்த போது, மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். தற்போது அல்வா கொடுத்து ஏமாற்றுகிறாரா? இவ்வாறு முதல்வர் கேள்வி எழுப்பினார்.
Thanks to Dailyhunt