அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் 44-வது பட்டமளிப்பு விழா!! 
ராணிப்பேட்டை மாவட்டம் அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் 44வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
கடந்த கல்வியாண்டில் பயின்று முடித்த மாணவிகள் மொத்தம் ஆயிரத்து 1262 பேர் இதில் இளங்கலை பட்டம் பெற்ற மாணவிகள் 1006,முதுகலை பட்டம் பெற்ற மாணவிகள் 230 ,எம் பில் பட்டம் பெற்ற மாணவிகள் 26 இதில் 41 மாணவிகள் பல்கலைக்கழக தரவரிசையில் இடம் பெற்றனர்.
இந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் திருமதி பரமேஸ்வரி தலைமை தாங்கினார். முனைவர் திருமதி ராஜலக்ஷ்மி இணை இயக்குனர் (தி & வ) சென்னை
பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினார்.
கல்லூரி மாணவிகள் பெற்றோர்கள் ஏராளமாய் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Source : Rathiri Rounds News