உருவாகிறது 3ஆவது அணி.. கமல்ஹாசனுடன் சரத்குமார் திடீர் சந்திப்பு.. !!
கமல்ஹாசனுடன் சரத்குமார் மற்றும் ஐ.ஜே.கே. மூத்த நிர்வாகி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையையும் தொகுதி பங்கீடு குறித்தும் தீரவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து சமத்துவ மக்கள் கட்சியும், திமுக கூட்டணியிலிருந்து இந்திய ஜனநாயக கட்சியும் விலகி புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளனர். எங்கள் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் என சரத்குமார், ரவி பச்சமுத்து ஆகியோர் நேற்று அறிவித்திருந்தனர்.
இந்த சூழலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை, சரத்குமார் நேரில் சந்தித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்திற்கு சரத்குமார் சென்றுள்ளார். அங்கு கமல்ஹாசன் – சரத்குமார் ஆலோசனை நடத்தினர்.

அப்போது சரத்குமாருடன் ஐஜேகே துணை பொதுச்செயலாளர் ரவிபாபு உடன் இருந்தார். தேர்தல் கூட்டணி தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே அண்மையில் சரத்குமார் மற்றும் ராதிகா ஆகியோர் சசிகலாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவர்கள் கூட்டணியில் அமமுக இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Thanks to Dailyhunt