Saturday , April 17 2021
Breaking News
Home / அரசியல் / மோடிக்கு வெள்ளி வேலை பரிசாக வழங்கிய எல்.முருகன்

மோடிக்கு வெள்ளி வேலை பரிசாக வழங்கிய எல்.முருகன்

மோடிக்கு வெள்ளி வேலை பரிசாக வழங்கிய எல்.முருகன்..!!

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை தமிழக ஆளூனர் பன்வாரிலால் புரோகித் மற்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வரவேற்றனர். கோவை கொடிசியா அரங்கில் 12,400 கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை நாட்டிற்கு அர்பணித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி பேசினார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய அவர், ‘கொங்கு மண் சிறந்த சிந்தனையாளர்களையும் கொண்டது. தமிழகம் எங்கும் உள்ள மக்களை இங்குள்ள ஆலயங்கள் இந்த பகுதிக்கு சுண்டி இழுக்கின்றது. தற்போது மின்துறை, துறைமுகம் நவீனமயமாக்கல் உட்பட பல பணிகள் துவங்கி வைத்தேன். இவை தமிழக மக்களின் வாழ்விற்கும், கண்ணியம் அளிக்கும் திட்டங்கள். தமிழக நாடு புதிய அரசை தேர்ந்து எடுக்க போகின்றது. இந்திய மக்கள் வளர்ச்சியை மையபடுத்திய அரசையே விரும்புகின்றனர்.

வளர்ச்சிக்கு எதிரானவர்களை தள்ளிவைக்கவே இந்திய மக்கள் விரும்புகின்றனர். தேசிய முற்போக்கு அரசும் தமிழக அரசும் கூட்டாச்சிக்கு நல்ல உதாரணமாக இணைந்து செயல்படுகின்றது. சிறிய வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அரசாக இந்த அரசு இருக்கின்றது’ என்று தெரிவித்தார். முன்னதாக பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு பா.ஜ.க தமிழக தலைவர் எல்.முருகன் வெள்ளி வேலை பரிசாக வழங்கினார்.

Thanks to Dailyhunt

About Admin

Check Also

தீவிரமாகும் கரோனா: புதுச்சேரியில் கல்லூரித் தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தீவிரமாகும் கரோனா: புதுச்சேரியில் கல்லூரித் தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு கரோனா தொற்றின் வேகம் காரணமாகப் புதுச்சேரி கல்லூரிகளில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster