சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள குஷ்பு கடந்த ஒரு மாதமாக இந்த தொகுதியில் தேர்தல் பணியாற்றி வருகிறார்..!!
சென்னையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தேர்தல் வரலாற்றில் பேசப்படும் தொகுதி. 1977 முதல் இந்த தொகுதியில் தி.மு.க.வே வெற்றி பெற்று வருகிறது. மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்த தொகுதியில் போட்டியிட்டு 3 முறை வெற்றி பெற்றிருக்கிறார்.
1991 தேர்தலில் மட்டும் காங்கிரஸ் வேட்பாளர் ஜீனத் சர்புதீன் வெற்றி பெற்றார்.
தி.மு.க.வுக்கு செல்வாக்கு மிகுந்த தொகுதியாக கருதப்படும் இந்த தொகுதியில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் விருப்ப மனுதாக்கல் செய்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து பா.ஜனதா சார்பில் குஷ்பு களம் இறங்குவார் என்று தெரிகிறது.
ஏற்கனவே இந்த தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள குஷ்பு கடந்த ஒரு மாதமாக இந்த தொகுதியில் தேர்தல் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் இந்த தொகுதி மட்டும் நட்சத்திர அந்தஸ்தை பெறுவது தொகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
குஷ்பு, உதயநிதி இருவரும் நட்சத்திர பிரபலங்கள், இருவரும் தங்கள் தொகுதியில் போட்டியிடுவதை நினைத்து தொகுதி மக்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.
திரையிலும், டி.வி.யிலும் பார்த்த இருவரும் தங்கள் தெருக்களிலும், வீடு வீடாகவும் வருவதால் தொகுதி மக்கள் உற்சாகம் அடைந்துள்ளார்கள்.
குஷ்பு இப்போதே தொகுதியில் வீடு வீடாக சென்று கலக்கி வருகிறார்.