Breaking News
Home / அரசியல் / தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல்: மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி?

தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல்: மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி?

தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கான சட்ட சபை தேர்தல் தேதி, மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..!!

புதுடெல்லி,
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும், சட்டசபை பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதனால் அங்கு தேர்தல் நடத்தப்படுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, துணை ஆணையர்கள் சுஷில் சந்திரா மற்றும் ராஜிவ் குமார் ஆகியோர் உள்ளடங்கிய குழுவினர், 5 மாநில சட்ட மன்றத் தேர்தல் தேதி குறித்து முடிவெடுப்பதற்காக ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்நிலையில், மார்சி முதல் வாரத்திலேயே தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Thanks to Daily Thanthi

About Admin

Check Also

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது…!! …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster