Breaking News
Home / அரசியல் / கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது – அமைச்சர் ஜெயக்குமார்

கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது – அமைச்சர் ஜெயக்குமார்

கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உள்ளிட்ட அனைத்து பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று கொண்டிருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்..!!

சென்னை திருவல்லிக்கேணியில் அம்மா மினி கிளினிக் கட்டிடத்தை திறந்து வைத்த பின்னர் நிருபர்களிடம்  அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-
 கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உள்ளிட்ட அனைத்து பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று  வருகிறது. உரிய நேரத்தில் கட்சித் தலைமை தொகுதிப் பங்கீடு விவரத்தை முறைப்படி அறிவிக்கும் என்றார்.
தமிழகத்தில் தேர்தல் அறிவிப்புக்கு முன், திமுக – காங்கிரஸ் கூட்டணி உடைய வாய்ப்பு உள்ளது . திமுக-காங்கிரஸ் கூட்டணி என்பது தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னாலேயே உடைந்து விடலாம்.  தமிழகத்தில் அதிமுக கூட்டணி பலமாக இருக்கிறது. திமுக – காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் உறுதித்தன்மையற்று இருப்பதால்தான் புதுச்சேரியில் தற்போது காங்கிரஸ் அரசு கவிழ்ந்திருப்பதாக தெரிவித்தார்.
Thanks to Dailyhunt

About Admin

Check Also

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது…!! …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster