Breaking News
Home / அரசியல் / முக்கிய அறிவிப்பு! வரும் 25ஆம் தேதி அதிரடி காட்ட இருக்கும் சசிகலா!!

முக்கிய அறிவிப்பு! வரும் 25ஆம் தேதி அதிரடி காட்ட இருக்கும் சசிகலா!!

முக்கிய அறிவிப்பு! வரும் 25ஆம் தேதி அதிரடி காட்ட இருக்கும் சசிகலா..!!

அமமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 25ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைமை தெரிவித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா விடுதலையாகி சென்னையில் உள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு அவர் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. கொரோனா பாதிப்பு ஏற்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 25ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கழக துணைத்தலைவர் அன்பழகன் தலைமையில் வரும் வியாழக்கிழமை அன்று காலை 09.00 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் இருப்பதால் அதற்கான முன்னெச்சரிக்கை வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் 10 இடங்களை காணொளி வாயிலாக இணைத்து நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சசிகலா விடுதலையான பிறகு நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் அவர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Thanks to Dailyhunt

About Admin

Check Also

சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு: அதிமுக-பாமக இன்று மாலை பேச்சுவார்த்தை

சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அ.தி.மு.க.- பா.ம.க. கட்சிகள் இடையே இன்று மாலை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது..!! சென்னை: …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster