Breaking News
Home / அரசியல் / அதிமுக கூட்டணியில் திடீர் திருப்பம். வெளியேறும் தேமுதிக..? உள்ளே வரும் நாம் தமிழர்..?

அதிமுக கூட்டணியில் திடீர் திருப்பம். வெளியேறும் தேமுதிக..? உள்ளே வரும் நாம் தமிழர்..?

அதிமுக கூட்டணியில் திடீர் திருப்பம். வெளியேறும் தேமுதிக..? உள்ளே வரும் நாம் தமிழர்..?

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்களும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன.. ஜெயலலிதா, கருணாநிதி என்ற இருபெரும் ஆளுமைகள் இல்லாமல் நடக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் திமுகவும் சரி, அதிமுகவும் சரி எப்படியாவது வெற்றி பெற வேண்டும் முனைப்புடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன..

 

இதுஒருபுறமிருக்க கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களும் மறுபுறம் நடைபெற்று வருகின்றன. அதிமுக கூட்டணியை பொறுத்தவரை, தற்போது பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகள் உள்ளன. இதில் தொகுதிளை ஒதுக்குதுவன் முரண்பாடு காரணமாக ஒரு சில கட்சிகள் கூட்டணியில் இருந்து விலக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது..

குறிப்பாக தேமுதிக அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.. மேலும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது.. இதற்கான கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அவர்கள் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் 10 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது..

ஆனால் நாம் தமிழர் கட்சி ஏற்கனவே 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு, தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ள நிலையில், அதிமுக – நாம் தமிழர் கூட்டணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது..

Thanks to Dailyhunt

About Admin

Check Also

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது…!! …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster