Breaking News
Home / அரசியல் / திமுக கூட்டணிக்குள் திடீர் குழப்பம்!? பதைபதைப்பில் ஸ்டாலின்!!

திமுக கூட்டணிக்குள் திடீர் குழப்பம்!? பதைபதைப்பில் ஸ்டாலின்!!

மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய மாநாட்டை தொடர்ந்து திமுக கூட்டணியில் ஒருவித சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமாண்டமாக மாநாடு நடத்துவது அரிது. ஆனால் இவ்வளவு செலவு செய்து மாநாடு நடத்தியதற்கான காரணம் என்னவென்று ஆராய்ந்த போது, தங்களுடைய பலத்தை காண்பிக்க இப்படி ஒரு மாநாடு நடத்தியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் நெருங்கும் சூழலில் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. ஆனால் அதிகாரப்பூர்வமற்ற வகையில் இடதுசாரிகளுக்கு 3 தொகுதிள், விசிக, மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகளை ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மதுரை மாநாட்டுக்கு பிறகு இதுகுறித்து இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள், வைகோ, திருமாவளவன் ஆகியோர் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் ஸ்டாலினிடம் அதிக தொகுதிகளை கேட்டுப் பெறுவதற்கு முடிவு செய்துள்ளனர்.

ஏனென்றால் தனி சின்னம் பெற 5% தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவு தப்போது அரசியல் கட்சிகளை அச்சம் கொள்ள செய்துள்ளன. அதனால் அனைவரும் சேர்ந்த தொகுதிகளை அதிகமாக கேட்டுப்பெற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் ஸ்டாலினுக்கு சென்றதை அடுத்து அவர் பதைபதைப்புடன் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால் கடந்த முறை மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் தனியாக சென்றதே ஸ்டாலின் தோற்க காரணம். அதனால் இந்த முறை அப்படி எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் ஸ்டாலின்.

Thanks to Dailyhunt

 

About Admin

Check Also

சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு: அதிமுக-பாமக இன்று மாலை பேச்சுவார்த்தை

சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அ.தி.மு.க.- பா.ம.க. கட்சிகள் இடையே இன்று மாலை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது..!! சென்னை: …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster