மனம் திருந்தியவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றிய, திருவள்ளூர் ஆட்சியர்..!!
திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்களின் மறுவாழ்விற்காக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மற்றும் எஸ்.பி அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் மாவட்டம் முழுவதும் கஞ்சா, குட்கா விற்பனை உள்ளிட்ட பல்வேறு மதுவிலக்கு குற்றச் செயல்களில் ஈடுபட்டு, மனம் திருந்தி வாழும் 76 பயனாளர்களுக்கு, தமிழக அரசின் புனர் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் சுமார் 22 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான கறவை மாடுகள் வழங்கப்பட்டது.
இதனையொட்டி, பயனாளிகளுக்கு ஆட்சியர் பொன்னையா மற்றும் எஸ்.பி அரவிந்தன் ஆகியார் கன்று குட்டிகளுடன் கூடிய கறவை மாடுகளை வழங்கி, புதிய வாழ்வை தொடர வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி., மீனாட்சி, மதுபிலக்குப்பரிவு டிஎஸ்பி செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Thanks to Dailyhunt