Breaking News
Home / தமிழகம் / காவல் துறை / ஆற்காடு தாசில்தாரின் தொடரும் அதிரடிகள்..!!

ஆற்காடு தாசில்தாரின் தொடரும் அதிரடிகள்..!!

ஆற்காடு தாசில்தார் அவர்களின் தொடரும் அதிரடி நடவடிக்கைகள்..!! 

இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம் திமிரி உள் வட்டம், விளாப்பாக்கம் மதுரா தத்திரவாடி கிராமத்தை சார்ந்த பத்மா க/பெ. விஸ்வநாதன் என்பவர் சர்வே எண்.398/6A1-யில் தெருவை ஆக்கிரமித்து இரும்பு தகடுகளை வைத்து ஆக்கிரமித்து அடாவடி செய்து வந்துள்ளார்.                          

பொதுமக்கள் கேட்டால் அவர்களிடம் வம்பு வளர்த்து மிரட்டுவரம். அவரிடம் பணம் மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ளதால் பல அதிகாரிகள் அவரை கண்டும் காணாமல் இருந்துள்ளனர். அவர்மீது காவல்துறையில் புகார் அளித்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இறுதியில் ராத்திரி ரவுண்ட்ஸ் செய்திகளை பார்த்து ஆற்காடு தாசில்தார் பற்றி கேள்விப்பட்டு அவரிடம் சென்று மனுகொடுத்தால் விரைந்தது நடவடிக்கை எடுப்பார் என்று அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் புகார் மனு செய்துள்ளார்.  

மேலும் ஆற்காடு தாசில்தார் அம்மனுவை பெற்று நேரில் சென்று ஆய்வு செய்து, வருவாய் துறையினரை முடுக்கிவிட்டுள்ளார். வருவாய் துறையினர் ஆய்வு செய்ததில் ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சி அவர்கள் நேரிடையாக களத்திற்கு சென்று JCB இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை இடித்து தள்ள உத்திரவிட்டார். அதனை தொடர்ந்து ஆக்கிரமிப்பு முழுவதும் அகற்ற்றப்பட்டது. 

அக்கிரமம் செய்த நபர் ஆற்காடு வட்டாட்சியரிடம் அவரது அரசியல் செல்வாக்கை காட்ட முயற்சி செய்து வாக்குவாதம் செய்துள்ளார். அதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் துணிச்சலாக ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.  

அவருடன் திமிரி காவல் நிலைய உதவி ஆய்வாளர், திமிரி வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் போன்றோர் உடன் இருந்தனர். ஆற்காடு வட்டாட்சியர் அதிரடி நடவடிககையை பார்த்த பொது மக்கள் இவரை போன்று நேர்மையான அதிகாரிகள் இருந்தால் எவருக்கும் அரசாங்க இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய எண்ணம் வராது என்று வட்டாட்சியரின் செயலை பெருமையாக பேசிக்கொண்டனர் .

ராத்திரி ரவுண்ட்ஸ் செய்திப்பிரிவும் மனதார பாராட்டுகிறது.

Source : Rathiri Rounds News

About Admin

Check Also

சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு: அதிமுக-பாமக இன்று மாலை பேச்சுவார்த்தை

சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அ.தி.மு.க.- பா.ம.க. கட்சிகள் இடையே இன்று மாலை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது..!! சென்னை: …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster