சாலை பாதுகாப்பினை பொது மக்களிடத்தில் எடுத்துரைத்து போக்குவரத்து விழிப்புணர்வில் அசத்தி வரும் புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலர்..!! 
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஓட்டுநர் உரிமம், நடத்துனர் உரிமம், வாகன உரிமம் மற்றும் போக்குவரத்து அலுவலகத்தால் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி வாகன விபத்தை எப்படி தவிர்ப்பது மற்றும் தலைகவசத்தின் தேவை என போக்குவரத்தின் அனைத்து விழிப்புணர்வுகளையும் பயனாளர்களான மக்களின் மத்தியில் வரிசை படி நிறுத்தி ஒரு உறுதிமொழியை ஏற்படுத்தி வருகிறார்.
புதுக்கோட்டை மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் திரு சி.க.ஜெயதேவ்ராஜ் அவர்கள் மற்றும் மற்ற மாவட்டங்களில் நடந்த கவனமற்ற விபத்துக்களை அனுபவ ரீதியாக எடுத்துரைத்து வருகிறார் வட்டார போக்குவரத்து அலுவலர் அவர்கள் அந்த அனுபவ ரீதியான பாடங்களை பயனாளிகளிடம் எடுத்து கூறி விபத்துகளிடமிருந்து தற்காத்து கொள்வதின் மூலம் விபத்துக்கள் நடக்காது என விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார் திரு சி.க.ஜெயதேவ்ராஜ் அவர்கள் மற்றும் புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் திரு.கருப்பச்சாமி அவர்கள் மோட்டார் வாகனங்களின் உரிமம் காலாவதியாகியும் புதுப்பிக்காத பேருந்து மற்றும் கனரக வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் அத்துமீறும் வாகனங்கள் என நெடுஞ்சாலைகளில் தணிக்கை செய்து மிகக் கடுமையாக வாகன ஓட்டிகளை எச்சரித்தும் வாகனங்களை பறிமுதல் செய்தும் உரிய பரிசீலனை பெற்ற பிறகே வாகனங்களை ஓட்ட அனுமதிக்கிறார் வட்டார போக்குவரது ஆய்வாளர் கருப்பசாமி அவர்கள்.
வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தங்களது கடமைகளை செய்தாலும் வாகன ஓட்டிகள் தான் கடைபிடிக்க வேண்டும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்று விட்டு வெளியே வந்தவுடன் மறந்து விடுகிறார்கள், விபத்தில்ல தமிழகம் உண்டாக்க வாகன ஓட்டிகள் தான் விழிப்புணர்வாக வாகனத்தை இயக்க வேண்டும் என புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் அவர்கள் அறிவுறுத்துகிறார்.
Source : Rathiri Rounds News