Breaking News
Home / வட மாவட்டங்கள் / செங்கல்பட்டு / நடத்தையில் சந்தேகம். மனைவியை கார் ஏற்றிக் கொன்ற சைக்கோ கணவன்!

நடத்தையில் சந்தேகம். மனைவியை கார் ஏற்றிக் கொன்ற சைக்கோ கணவன்!

சென்னை அருகே மனைவி நடத்தை மீது சந்தேகம் கொண்ட கணவர் அவரை கார் ஏற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!!

மதுராந்தகம் பகுதியை சேர்ந்த மருத்துவர் கோகுல் குமாருக்கும் (40), கீர்த்தனா என்ற பெண்ணுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமான நாளில் இருந்து சந்தேகம் காரணமாக கணவன், மனைவி இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது.

பிரச்னை எல்லை மீறியதை அடுத்து இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகினர். கோகுல் குமார் சோத்துப்பாக்கம் பகுதியில் தங்கியிருந்தார். கீர்த்தனா தந்தை வீட்டுக்கு வந்துவிட்டார்.

இந்நிலையில் நேற்று கீர்த்தனாவின் வீட்டுக்கு சென்ற கோகுல் குமார் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கத்தியால் கழுத்தில் குத்தினார். அதை தடுக்க வந்த கீர்த்தனாவின் தந்தைக்கும் காயம் ஏற்பட்டது.

அதன் பின்னர் கீர்த்தனாவை வெளியே இழுத்து வந்த அவர் சாலையில் தள்ளி, தனது காரை விட்டு ஏற்றி கொலை செய்தார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

துரிதமாக விசாரணை மேற்கொண்ட போலீஸார் ஆத்தூர் அருகே சென்று கொண்டிருந்த கோகுல்குமாரை மடக்கிப்பிடித்தனர். கீர்த்தனாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Thanks to Dailyhunt

About Admin

Check Also

கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடி!

கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடி..!! டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசிக்கான …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster