முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரபல ரவுடி ஒருவருக்கு சால்வை அணிவித்த புகைப்படத்தை பார்த்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..!!
சேலம் மாவட்டம் கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த சுசீந்திரன் என்ற ரவுடி மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. சில நாட்களுக்கு முன்பு ரவுடி சுசீந்திரனின் பிறந்த நாளின் போது காவல் ஆய்வாளர் கருணாகரன், அவருக்கு கேக் ஊட்டும் போட்டோ இணையத்தில் வைரலானது.
இதனையடுத்து காவல் ஆய்வாளர் கருணாகரன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்த ரவுடிக்கு சால்வை அணிவிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படம் காவல்துறையினர் சிலருக்கு வாட்ஸ்-அப்பில் வந்துள்ளது. இதைப் பார்த்த காவல்துறை அதிகாரிகள் திகைத்துப்போய் உள்ளனர்.
மேலும் எம்.எல்.ஏ வெங்கடாஜலம், முன்னாள் மேயர் சவுண்டப்பன், முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி பழனிசாமி ஆகியோருடன் ரவுடி சுசீந்திரன் இருப்பது போன்ற படங்களும் காவல்துறையினரின் வாட்ஸ்-அப் எண்ணிற்கு வந்துள்ளது.
தமிழகத்தில் தேர்தல் வர உள்ள நிலையில் இது ரவுடிகளின் ஆதரவுடன் களம் காண எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருப்பதை காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Thanks to Dailyhunt