ஆற்காடு, கலவை தாலூக்காவைச் சேர்ந்த பயனாளிகளுக்கு பட்டா மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி..!! 
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், விளாப்பாக்கத்தில் அமைந்துள்ள ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாவட்டவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை சார்பில் நேற்று (19-02-2021) மாலை நடந்த விழாவில் மதிப்புக்குரிய பத்திரப்பதிவு மற்றும் வணிகவரி துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் கிளாஸ்டன் புஷ்பராஜ் முன்னிலையில் பயனாளிகளுக்கு பட்டா மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர், ஆற்காடு வட்டாட்சியர், கலவை வட்டாட்சியர் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும் இதில் இலவச வீட்டு மனை பட்டா மற்றும் தாலிக்கு தங்கம் ஆற்காடு வட்டத்தில் 826 பயனாளிகளும் கலவை வட்டத்தில் 167 பயனாளிகளும் ஆக மொத்தம் 993 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
முடிவில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் நாட்டுப்பண் பாட மறந்து நிகழ்ச்சியை முடித்து சென்றனர்.
Source : Rathiri Rounds News