புதுச்சேரியின் ஐந்தாவது பெண் துணைநிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்றுக் கொண்டார்…!! 
புதுச்சேரியின் பொறுப்பு துணை நிலை ஆளுநர் ஆக தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்றார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி தமிழிசைக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதுச்சேரி வரலாற்றில் முதல் முறையாக தமிழ் மொழியில் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார் தமிழிசை. கிரண்பேடி நீக்கப்பட்டதை அடுத்து தெலுங்கானா ஆளுநரான தமிழிசை , புதுச்சேரியின் பொறுப்பு ஆளுநராக பதவியேற்று கொண்டார்.
புதுச்சேரியின் முதலமைச்சரான நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும், துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடிக்கும் இடையே அடிக்கடி கடுமையான மோதல் நிலவி வந்த நிலையில், துணைநிலை ஆளுநரை மாற்ற வேண்டும் என நாராயணசாமி அவர்கள் தெரிவித்து வந்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் கிரண்பேடியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டார். கிரண்பேடி நீக்கத்தை தொடர்ந்து, தெலுங்கானா ஆளுநராக பதவி வகித்து வரும் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தற்போது புதுச்சேரியின்துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதுச்சேரி ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்கும் விழாவில் முதல்வர் நாராயணசாமி பங்கேற்றுள்ளார். அத்துடன் சபாநாயகர் சிவக்கொழுந்து, எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் விழாவில் பங்கேற்றுள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த முக்கிய பாஜக நிர்வகிக்கும் விழாவில் பங்கேற்றனர்.
Thanks to Dailyhunt