இந்தியா- இங்கிலாந்து மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று தொடங்கியது. இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்திய அணி?
சென்னை: ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இதே சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியுள்ளது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங் தேர்வு செய்து, இந்திய அணி ஆடி வருகிறது. தற்போது 32 ஓவருக்கு 3 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்துள்ளது.
எஞ்சிய மூன்று டெஸ்டுகளில் ஒன்றில் தோற்றாலும் இ்ந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியாது. குறைந்தது 2 வெற்றி, ஒரு டிரா என்ற வகையிலாவது முடிவு காண வேண்டும். அந்த வகையில் இந்த டெஸ்ட் இந்திய அணிக்கு வாழ்வா? சாவா? போராட்டம் என்றே சொல்லலாம்.
Source : Rathiri Rounds News