Sunday , October 17 2021
Breaking News
Home / 2021 / October / 13

Daily Archives: October 13, 2021

நீட் விலக்கு மசோதா: கவர்னருடன் முதல்வர் சந்திப்பு

சென்னை: நீட் விலக்கு மசோதா தொடர்பாக கவர்னர் ரவியை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் பேசினார். சட்டசபையில், நீட் தேர்வுக்கு எதிராக கடந்த செப்டம்பர் மாதம் 14ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைய உள்ள நிலையில், இது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று(அக்.,13) மாலை கவர்னர் ரவியை சந்தித்து பேசினார். முதல்வருடன் தலைமை செயலர் இறையன்பு உடன் சென்றார். Share …

Read More »

இந்தியாவில் ‘பூஸ்டர்’ தடுப்பூசி: 3வது கட்ட பரிசோதனைக்கு விரைவில் அனுமதி

புதுடில்லி: ஐதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிக்கல் – இ நிறுவனம் தங்களது ‘கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசியின் 3வது கட்ட பரிசோதனைக்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. கோவிட் வைரசுக்கு எதிராக, ஐதராபாத்தைச் சேர்ந்த ‘பயாலஜிக்கல் -இ’ என்ற மருந்து நிறுவனம், ‘கோர்பேவேக்ஸ்’ என்ற தடுப்பூசியை தயாரித்து உள்ளது. இந்நிறுவனம் 3வது கட்ட பரிசோதனை நடத்த அனுமதி கோரி, இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்தில் விண்ணப்பித்து உள்ளது. விண்ணப்பத்தில் தெரிவித்து உள்ளதாவது: தற்போது இரு …

Read More »

சாவர்க்கரை கருணை மனு தாக்கல் செய்ய சொன்னது மகாத்மா காந்தி தான்: ராஜ்நாத் சிங்

புதுடில்லி: சாவர்க்கர் தொடர்பாக பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், அவரை ஆங்கிலேயரிடம் கருணை மனுக்களை தாக்கல் செய்ய சொன்னது மகாத்மா காந்தி தான் எனவும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டில்லியில் நேற்று (அக்.,12) சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்ற மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: சாவர்க்கர் தொடர்பாக பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. சிறையில் இருந்து விடுதலையாக ஆங்கிலேய அரசிடம் …

Read More »

பிரான்சில் கோர விபத்து: தண்டவாளத்தில் உறங்கிய அகதிகள் மீது ரயில் ஏறியதில் மூவர் பலி

பாரீஸ்: பிரான்சின் பியாரிட்ஸ் நகரில் தண்டவாளத்தில் படுத்திருந்த அகதிகள் மீது ரயில் ஏறியதில் மூவர் உயிரிழந்தனர்; ஒருவர் படுகாயம் அடைந்தார். பிரான்சின் தென்மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை நகர் பியாரிட்ஸ். இது பிரான்சுக்கு வரும் அகதிகளுக்கான பிரதான வழித்தடமாக உள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து வரும் அகதிகள், இந்த நகரில் இருந்துதான் பிரான்சின் பிற இடங்களுக்கு செல்கின்றனர். பியாரிட்ஸ் நகருக்கு வந்த அகதிகள் சிலர், நேற்று முன்தினம் இரவு அங்குள்ள …

Read More »

தி.மு.க.,வின் வெற்றி புறவாசல் வழியாகப் பெற்ற வெற்றி: அ.தி.மு.க., குற்றச்சாட்டு

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., பெற்ற வெற்றி புறவாசல் வழியாகப் பெற்ற வெற்றி என குற்றம் சாட்டியுள்ள அ.தி.மு.க., சட்ட விதிமீறல்களையும் தேர்தல் ஆணையத்தின் கையாலாகாத்தனத்தையும் நீதிமன்றத்தில் எடுத்துரைத்து ஜனநாயகத்தின் முன் வெளிப்படுத்திக் காட்டுவதாகவும் கூறியுள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று (அக்.,12) காலை முதல் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தமுள்ள 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 138 இடங்களை …

Read More »

வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரம் பாதிப்பு: ஐ.நா., கவலை

நியூயார்க்: ‛‛கொரோனா பாதிப்பு காரணமாக வளர்ந்து வரும் நாடுகள் பலவும் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளன,” என்று ஐ.நா., பொதுச்செயலாளர் கவலை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் சர்வதேச நிதியம் நடத்திய கொரோனா பாதிப்பு தொடர்பான நிகழ்ச்சியில் ஐ.நா., பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் பங்கேற்று பேசியதாவது: கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக 10 கோடிக்கும் மேற்பட்ட மக்களை வறுமையில் தள்ளிவிட்டது. 400 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு சமூக ஆதரவு குறைவாக உள்ளது. …

Read More »

பழைய ‘கெட்-அப்’பில் மோடி: சமூக வலைதளங்களில் வைரல்

புதுடில்லி: நீண்ட முடி, தாடியுடன் காணப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, தற்போது, அதனை திருத்தம் செய்துள்ளார். இது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.   பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் தனது உடல் எடை, உடை, தோற்றம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து வருவார். உடல் நலனை பேண தினமும் யோகா செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். வெள்ளை தாடி, முடியுடன் எப்போதும் வலம் வருவார். அதனை சரியான அளவில் …

Read More »

தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 1,280 ஆக சற்று குறைந்துள்ளது: 1,453 பேர் நலம்

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,289 -ல் இருந்து 1,280 ஆக சற்று குறைந்துள்ளது. 19 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,453 பேர் குணமடைந்து உள்ளனர். இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,38,288 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 1,279 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. மேலும் சவுதி அரேபியாவில் இருந்து வந்த ஒருவர் …

Read More »

நடப்பாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி.,யில் கடன் 90 சதவீதமாக ஆக உயரும்: ஐ.எம்.எப்.,

புது டில்லி: கோவிட் மற்றும் அதனை கட்டுப்படுத்த வகுத்த கொள்கைகளால் உலக நாடுகளின் கடன் அளவு புதிய உச்சத்தை தொட்டிருப்பதாகவும், இந்தியாவின் கடன் அளவு நடப்பு ஆண்டில் ஜி.டி.பி.,யில் 90.6 சதவீதம் ஆக உயரக்கூடும் என ஐ.எம்.எப்., நிதி விவகாரத் துறை இயக்குநர் தெரிவித்தார். நடப்பு ஆண்டுக்கான நிதி கண்காணிப்பு அறிக்கையினை ஐ.எம்.எப்., வெளியிட்டது. அதில், “2020-ல் உலகளாவிய கடன் 226 டிரில்லியன் டாலர் என்ற புதிய உச்சத்திற்கு உயர்ந்துள்ளது. …

Read More »

பிரான்சிலிருந்து மேலும் மூன்று ரபேல் போர் விமானங்கள் குஜராத் வருகை

புதுடில்லி : ஐரோப்பிய நாடான பிரான்சில் இருந்து மேலும் மூன்று புதிய ரபேல் போர் விமானங்கள் இன்று குஜராத்தில் தரையிறங்க உள்ளன. ஐரோப்பிய நாடான பிரான்சில் இருந்து ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பிலான 36 புதிய ரபேல் போர் விமானங்களை வாங்க கடந்த 2016ல் மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது.முதல்கட்டமாக ஐந்து ரபேல் போர் விமானங்கள் ஹரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்திற்கு வந்து சேர்ந்தன. அதன் பின் பல்வேறு கட்டங்களாக …

Read More »
MyHoster