Sunday , October 17 2021
Breaking News
Home / 2021 / October / 10

Daily Archives: October 10, 2021

மீண்டும் ஒரு மின்வெட்டுக் காலகட்டத்தை தமிழகம் தாங்காது: கமல்

சென்னை: ‛‛மீண்டும் ஒரு மின்வெட்டுக் காலகட்டம் என்றால் தமிழகம் தாங்காது,” என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது: தமிழகத்தின் தினசரி மின்தேவை 14,000 மெகாவாட் வரை உயரும். தமிழகத்தில் உள்ள அனல்மின் நிலையங்கள் மூலமாக தினமும் 4,320 மெகாவாட் வரை மின்உற்பத்தியாகிறது. அனல் மின் நிலையங்கள் தடையின்றி இயங்க நிலக்கரி அவசியம். அனல்மின் நிலையங்களில் 14 நாட்களுக்குத் தேவையான …

Read More »

ஆவடி, தாம்பரம் மாநகர போலீஸ் ஸ்டேஷன் எல்லைகள்: டி.ஜி.பி., அறிவிப்பு

சென்னை: ஆவடி, தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர்களுக்கான போலீஸ் ஸ்டேஷன் எல்லைகள் குறித்த அறிவிப்பை தமிழக போலீஸ் டி.ஜி.பி., சைலேந்திரபாபு வெளியிட்டார். சென்னை மாநகரம் விரிவடைந்து காணப்படுகிறது. ஒரு போலீஸ் கமிஷனர் மட்டும் இதை நிர்வகிப்பதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து போலீஸ் நிர்வாக வசதிக்காக தாம்பரம், ஆவடி என இரண்டாக பிரிக்கப்பட்டது. ஆவடி போலீஸ் கமிஷனராக ஏ.டி.ஜி.பி., சந்தீப் ராய் ரத்தோர், தாம்பரம் போலீஸ் கமிஷனராக ஏ.டி.ஜி.பி., ரவி …

Read More »

காஷ்மீரில் 16 இடங்களில் என்.ஐ.ஏ., ரெய்டு

ஸ்ரீநகர்: காஷ்மீரில் 16 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்தியாவிற்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு நடத்துவதற்கு, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் ஆட்கள் தேர்வு செய்தது தொடர்பாக கடந்த ஜூன் 29ல் என்.ஐ.ஏ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக ஜூலை 11ல் சோதனை நடத்தி 3 பேரை கைது செய்தனர். அதேபோல், கடந்த ஜூன் மாதம் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளிடம் இருந்து 5 கிலோ ஐ.இ.டி வெடிபொருள் …

Read More »

வாய்ப்பிருக்கும் இடமெல்லாம் ‘அரசியல் சுற்றுலா’ செல்லும் ராகுல்: அமைச்சர் கிரிராஜ் சிங் கிண்டல்

புதுடில்லி: காங்கிரஸ் கட்சிக்கு எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் ‘அரசியல் சுற்றுலா’ செல்கிறார் ராகுல் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் விமர்சித்துள்ளார். உ.பி.,யில் உள்ள லக்கிம்பூரில் சமீபத்தில் பா.ஜ., கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார், கூட்டத்துக்குள் புகுந்தது. மத்திய உள்துறை இணைஅமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான அஜய் குமார் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, …

Read More »

ஏற்றுமதியில் தமிழகத்தை முதலிடத்திற்கு கொண்டு வர நடவடிக்கை: முதல்வர்

சென்னை: இந்தியாவில், ஏற்றுமதியில் தமிழகத்தை முதலிடத்திற்கு கொண்டு வர தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தெற்கு ஆசியாவிலேயே தொழில் முதலீட்டிற்கு ஏற்ற மாநிலம் தமிழகம். புதிய தொழில்களை துவங்குவதற்கு உள்கட்டமைப்புகளை சீர்செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்து மாவட்டங்களையும், அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதே தமிழக அரசின் நோக்கம். திமுக அரசின் 4 மாத ஆட்சி …

Read More »

மின்சார விநியோகத்திற்கு இடையூறு இருக்காது: மத்திய அமைச்சர் உறுதி

புதுடில்லி: ‛‛கோல் இந்தியா நிறுவனத்திடம், 24 நாட்களுக்கு தேவையான 43 மில்லியன் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளதாகவும், மின்சார விநியோகத்தில் எந்த இடையூறும் ஏற்படாது என அனைவரிடமும் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்,” என, மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்து உள்ளார். நாட்டின் மொத்த மின் தேவையில் 70 சதவீதம், நிலக்கரி வாயிலாக இயக்கப்படும் அனல் மின் நிலையங்களில் இருந்தே கிடைக்கிறது. நாடு முழுதும் உள்ள 135 அனல் …

Read More »

உயிரை பணயம் வைத்து தடுப்பூசி எடுத்துச் செல்லும் பெண்கள்: பிரதமர் பாராட்டு

புதுடில்லி: கரணம் தப்பினால் மரணம் ஏற்படும் வகையிலான உயரமான மலைப்பாதையை இரு பெண் சுகாதார பணியாளர்கள் தடுப்பூசிகளுடன் கடக்கும் வீடியோவை பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, அவர்களை பாராட்டியுள்ளார். இந்தியாவில் மே முதல் தேதியிலிருந்து 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இன்றைய தேதியில் இந்தியாவில் சுமார் 95 கோடிக்கும் மேற்பட்ட கோவிட் டோஸ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. தினசரி 50 லட்சம் டோஸ்களுக்கும் மேல் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. …

Read More »

காலிஸ்தானுடன் தொடர்பு படுத்தப்படும் விவசாயிகள்; விமர்சிக்கும் வருண்

புதுடில்லி: லக்கிம்பூர் கெரி விவகாரம் குறித்து பா.ஜ., எம்.பி., வருண் தொடர்ந்து சமூக வலைதளமான டிவிட்டரில் விமர்சனத்தை முன்வைத்து வருகிறார். இதனை காலிஸ்தானுடன் தொடர்புபடுத்தி ஹிந்து-சீக்கிய மதக் கலவரமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் காட்டமாக விமர்சித்துள்ளார். பார்லிமென்ட்டின் கீழ் அவையில் மூன்றாவது முறையாக உறுப்பினராகத் தேர்வு செய்யப் பட்டு உள்ள பா.ஜ.,வின் மூத்த அரசியல் தலைவர் வருண். லக்கிம்பூர் கெரி விவகாரம் குறித்து தொடர்ந்து வருண் குற்றச்சாட்டுகளை …

Read More »

ரஷ்யாவில் விமானம் விழுந்து விபத்து: 16 பேர் பலி

மாஸ்கோ: ரஷ்யாவில் இன்று விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் பலியாகினர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. 7 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். ரஷ்யாவின் டாடர்ஸ்தான் குடியரசு பகுதியில் பாராசூட் வீரர்கள் உள்ளிட்ட 23 பேருடன் இன்று விமானம் சென்று கொண்டிருந்தது. திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்த விமானம் இரண்டாக பிளந்து விபத்துக்குள்ளானது. இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் …

Read More »

தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 1,329 ஆக சற்று குறைந்துள்ளது: 1,436 பேர் நலம்

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,344 -ல் இருந்து 1,329 ஆக சற்று குறைந்துள்ளது. 15 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,436 பேர் குணமடைந்து உள்ளனர். இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,40,091 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 1,329 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,78,265 …

Read More »
MyHoster