Sunday , October 17 2021
Breaking News
Home / 2021 / October / 08

Daily Archives: October 8, 2021

இந்திய விமானப்படை தினம்: வீரர்கள் சாகசம்

காசியாபாத்: இந்திய விமானப்படையின் 89வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானபடை தளத்தில் விமானப்படை வீரர்கள் சாகசம் செய்தனர். அதில், சுகோய் -30 மற்றும் ரபேல் விமானங்களும் வானில் பறந்தன. பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.   ஏஎன் 32 போர் விமானம் மூலம் ஆகாஷ் கங்கா அணியினர் சாகசம் நிகழ்த்தி விழாவை துவக்கி வைத்தனர். இந்த விழாவில், பாரம்பரிய, நவீன மற்றும் முக்கிய போர் …

Read More »

இந்தியாவில் கோவிட் சிகிச்சையில் உள்ளோர் 2.4 லட்சம் பேர்; 205 நாளில் மிகக்குறைவு

புதுடில்லி: இந்தியாவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2.40 லட்சமாக குறைந்தது. இது கடந்த 205 நாளில் மிகக்குறைவாகும். இந்தியாவில் கோவிட் நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள்: இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 97.96 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.33 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 0.71 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். உலக பாதிப்பு இன்று (அக்.,08ம் தேதி) …

Read More »

5 – 11 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி: அமெரிக்காவுக்கு பைஸர் கோரிக்கை

வாஷிங்டன்: 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்த ஒப்புதல் அளிக்குமாறு பைஸர் நிறுவனம் அமெரிக்க அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கனடா, சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் உணவு மற்றும் மருத்துவத் துறைக்கு பைஸர் நிறுவனம் அனுப்பியுள்ள விண்ணப்பத்தில், ‘இதுவரை 2,000க்கும் அதிகமான 5 – 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கோவிட் …

Read More »

தலிபான்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு: யோகி

புதுடில்லி: எதிர்க்கட்சிகள், தலிபான்களுக்கு ஆதரவு அளிப்பதாகவும், ஹிந்துக்களுக்கு எதிராக உள்ளதாகவும் உத்தர பிரதேச முதல்வர் யோகி.ஆதித்யநாத் குற்றம்சாட்டி உள்ளார். தனியார் ஆங்கில டிவிக்கு அளித்த பேட்டியில் யோகி கூறியதாவது: ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை. லக்கிம்பூர் விவகாரம் குறித்து விசாரணை துவங்கி உள்ளது. உரிய முறையில் இது நடக்கும். வரும் காலத்தில் பலர் கைது செய்யப்டுவர். லக்கிம்பூர் விவகாரம் அரசியலாக்கப்பட்டது அவமானத்திற்குரியது. எதிர்க்கட்சி தலைவர்கள் அரசியல் சுற்றுலா வருகின்றனர். கோவிட் காலத்தில் …

Read More »

வடகொரியாவுக்கு கோவிட் மருந்து: சீனாவில் இருந்து அனுப்பும் உலக சுகாதார அமைப்பு

பீஜிங்: வடகொரியாவுக்குத் தேவையான கோவிட் மருந்துகளை சீனாவில் இருந்து கப்பல் வழியாக உலக சுகாதார அமைப்பு அனுப்பத் தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கோவிட் பெருந்தொற்றால் உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிப்புக்கு உள்ளாகின. ஆனால், கோவிட் தொற்று குறித்த எந்தத் தகவலையும் வெளியிடாமல் இருந்த வடகொரியா தொடர்ந்து தங்கள் நாட்டு எல்லைகளை மூடிவைத்தது. சீனா வழங்கிய சினோவாக் கோவிட் தடுப்பூசியையும் வடகொரியா வாங்க மறுத்தது. மேலும், ‘தங்கள் …

Read More »

காஷ்மீர் மக்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு அளிக்கவேண்டும்: பிரியங்கா

புதுடில்லி: காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் கடந்த 5 நாட்களில் இரண்டு பள்ளி ஆசிரியர்கள் உட்பட மொத்தம் 7 பேர் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகினர். இதனையடுத்து தற்போது காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காஷ்மீர் மக்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியுள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் அவ்வப்போது பாகிஸ்தானில் பயிற்சிபெற்ற பயங்கரவாதிகள் அத்துமீறி துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பயங்கரவாதிகளின் புகலிடமாகத் திகழும் பாகிஸ்தான் காஷ்மீரில் நடக்கும் வன்முறை …

Read More »
MyHoster