Sunday , October 17 2021
Breaking News
Home / 2021 / October / 07

Daily Archives: October 7, 2021

வெப்பம் பாதிக்காத ‘இன்சுலின்’ மருந்து: இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

ஐதராபாத் : நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ‘இன்சுலின்’ ஊசி மருந்தை குளிர்சாதன வசதியின்றி, சாதாரண அறையில் வைத்து பாதுகாக்க முடியும் என இந்திய விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஐதராபாத்தைச் சேர்ந்த, இந்திய ரசாயன தொழில்நுட்ப மையம், கோல்கட்டாவின் இந்திய ரசாயன உயிரியல் மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவுடன் இணைந்து, குளிர்சாதன பெட்டியின்றி, சாதாரண அறையில் இன்சுலின் மருந்தை பாதுகாக்கும் வழியை கண்டுபிடித்துள்ளனர். வழக்கமாக, இன்சுலின் மருந்தை, 2-8 செல்சியஸ் டிகிரியில் …

Read More »

ஆப்கனில் குருத்வாரா சூறை; சீக்கியர்கள் சிறைப்பிடிப்பு

காபூல்: ஆப்கானில் தலிபான்கள் குருத்வாராவை சூறையாடி அங்கிருந்த சீக்கியர்களை சிறைபிடித்திருப்பது சிறுபான்மை மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கனை இரு மாதங்களுக்கு முன் கைப்பற்றிய தலிபான் பயங்கரவாதிகள், அனைத்து மதத்தினரும் அவரவர் விருப்பப்படி வழிபாடு நடத்த அனுமதிக்கப்படுவர் என, தெரிவித்திருந்தனர். அதற்கு மாறாக நேற்று, தலைநகர் காபூலில் உள்ள சீக்கியர்களின் குருத்வாராவுக்குள் தலிபான்கள் நுழைந்து அங்கிருந்த சிலைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர். மேலும், வழிபாட்டு சின்னங்கள், பூஜை பொருட்கள் ஆகியவற்றையும் சூறையாடினர். …

Read More »

‛ஜியோ’ இணைப்பில் சிக்கல்; சமூக ஊடகத்தில் குவிந்தது மீம்ஸ்

புதுடில்லி: ‘ரிலையன்ஸ் ஜியோ’ சேவையில் பரவலான குறைபாடு ஏற்பட்டதை அடுத்து, சமூக வலைதளங்களில் புகார்கள் மற்றும் ‘மீம்’கள் குவிந்தன. ‘பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம்’ உள்ளிட்ட சமூக ஊடகங்கள், உலகின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களுக்கு முன் முடங்கின. ஆறு மணி நேரத்திற்குப் பின் தொழில் நுட்பக்கோளாறு சரி செய்யப்பட்டது.   தற்காலிக முடக்கம் இந்த சம்பவத்தின் போது, ‘பேஸ்புக்’ நிறுவனத்தையும் அதன் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க்கையும் விமர்சித்து, …

Read More »

இந்தியாவில் மேலும் 22 ஆயிரம் பேருக்கு கோவிட் தொற்று; 24 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்

புதுடில்லி: இந்தியாவில் மேலும் 22 ஆயிரம் பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 24 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் கோவிட் நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள்: இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 97.95 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.33 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 0.72 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். தடுப்பூசி இந்தியாவில் இன்று …

Read More »

ஆயுதபூஜைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு

சென்னை: ‛‛ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்ல கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்,” என, அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு வரும் 12, 13ம் தேதிகளில் பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க போக்குவரத்துத்துறை கூடுதல் பேருந்துகளை இயக்க உள்ளது. அதன்படி, வெளியூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி, பேருந்து நிலையம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய 3 இடங்களில் இருந்து இயக்கப்படும் …

Read More »

மலேரியா தடுப்பூசி: உலக சுகாதார அமைப்பு அனுமதி

ஜெனிவா: உலகின் முதல் மலேரியா தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியதை அடுத்து, ஆப்பிரிகாவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அந்த தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.     உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளதாவது:கடந்த 1987ல் மலேரியா காய்ச்சலைத் தடுக்க மாஸ்குயிரிக்ஸ் என்ற தடுப்பூசியை கிளாக்ஸோ ஸ்மித்கிளைன் நிறுவனம் உருவாக்கியது. அந்த தடுப்பூசியின் செயல்திறன் குறைவாக இருந்ததால், அதை மேம்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்காக கடந்த 2019ல் …

Read More »
MyHoster