Sunday , October 17 2021
Breaking News
Home / 2021 / October / 06

Daily Archives: October 6, 2021

வாட்ஸ்ஆப் முடக்கத்தால் டெலிகிராமுக்கு தாவிய 7 கோடி பயனர்கள்

புதுடில்லி: வாட்ஸ்ஆப் செயலியின் முடக்கத்தால் 7 கோடி பயனர்கள் டெலிகிராம் செயலிக்கு மாறி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் கடந்த அக்.,04ம் தேதி இரவு திடீரென முடங்கின. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் திகைத்தனர். இணையப் பிரச்னை என முதலில் நினைத்த பயனர்கள், சில மணி நேரங்களுக்குப் பின்னரே வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் முடங்கியதை அறிந்து கொண்டனர். இந்த திடீர் …

Read More »

லக்கிம்பூர் வன்முறை – குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்ற அரசு முயற்சி; கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

புதுடில்லி: ‛‛லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை காப்பாற்ற பா.ஜ., அரசு முயற்சி செய்கிறது,” என்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். உ.பி., மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனுடைய கார் மோதியதால் ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் …

Read More »

வடபழநி கோவில் குளக்கரை காரிய மண்டபத்திற்கு தீர்வு : பக்தர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியது

சென்னை : வடபழநி கோவில் குளக்கரை காரிய மண்டப விவகாரத்தில், பக்தர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியது . மகாளய அமாவாசையை முன்னிட்டு, வடபழநி கோவில் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள காரிய மண்டபத்தை ஆக்கிரமித்துள்ள கட்சியினர் வசூல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு, ஆய்வு மேற்கெண்ட அமைச்சர் சேகர்பாபு, கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்தார். மேலும், காரிய மண்டபம் விரைவில் இடமாற்றம் செய்யப்படும் எனவும் தெரிவித்தார். பழநிக்கு நிகரான வடபழநி ஆண்டவர் கோவிலில் அதிகாலை, …

Read More »

உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு ரூ.1 கோடி: பஞ்சாப், சத்தீஸ்கர் இணைந்து வழங்குகிறது

லக்னோ: உத்தர பிரதேசின் லக்கிம்பூர் கேரி பகுதியில் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்த 4 விவசாயிகள் மற்றும் ஒரு பத்திரிகையாளரின் குடும்பத்தினருக்கு பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் அரசுகள் தனித்தனியாக தலா ரூ.50 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளது. லக்கிம்பூரில் ஞாயிறன்று நடந்த வன்முறையில் எட்டு பேர் உயிரிழந்தனர். அவர்களில் 4 பேர் விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர், இருவர் பா.ஜ.க., தொண்டர்கள் மற்றும் உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் ஓட்டுநரும் …

Read More »

25 ஆண்டுக்கு பின் அமெரிக்க பணக்காரர் பட்டியலிலிருந்து டிரம்ப் வெளியேற்றம்

வாஷிங்டன்: கடந்த 25 ஆண்டுகளில் முதன் முறையாக அமெரிக்காவின் பணக்காரர் வரிசையில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் பெயர் இடம் பெறாமல் போர்ப்ஸ் பத்திரிகை பட்டியலை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து வெளிவரும் போர்ப்ஸ் பத்திரிகை உலக புகழ் பெற்றது. இது உலக பணக்காரரர்கள் பட்டியல் முதல் அமெரிக்க கோடீஸ்வரர்களின் பட்டியலை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. இதில் குறைந்த பட்சம் 400 அமெரிக்க கோடீஸ்வரர்கள் இடம் பெறுவது வழக்கம். அமெரிக்காவில் …

Read More »

தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 1,432 ஆக சற்று குறைந்துள்ளது: 1,519 பேர் நலம்

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,449 -ல் இருந்து 1,432 ஆக சற்று குறைந்துள்ளது. 25பேர் உயிரிழந்து உள்ளனர். 1,519 பேர் குணமடைந்து உள்ளனர். இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,45,338 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 1,432பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,72,843 ஆக அதிகரித்து …

Read More »

இது உங்கள் இடம்: ஹிந்துக்களிடம் போராட்ட குணம் மறைந்து விட்டது!

சி. ரமேஷ் குமார், கோவையிலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: முகலாயர் ஆட்சி காலத்தில் கோவில்கள் சிதைக்கப்பட்டு, அதன் செல்வங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. மேலும், கோவில்களில் கடும் கட்டுபாடுகளுடன், சிறு கொண்டாட்டமும் இல்லாமல் கடவுளை தரிசிக்க மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. முகலாயர் மன்னர்களால் பல்வேறு துன்பங்களை அனுபவித்த போதும், ஹிந்து தர்மத்தை காக்க பல்லாயிரம் பேர் தங்கள் இன்னுயிரை தந்தனர். ஆட்சியாளர்களின் கொடுமை தாங்காமல், பலர் அவர்களின் மதத்திற்கு மாறி …

Read More »

சமையல் சிலிண்டர் விலை ரூ.15 உயர்வு

சென்னை: வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு, ‘சிலிண்டர்’ விலை, 15 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் சிலிண்டர் விலை ரூ.915 ஆக அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலை அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் மாற்றம் ஏற்படுகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினசரியும், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, மாதத்தில் ஒரு முறை அல்லது இருமுறை மாற்றம் …

Read More »

9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு இன்று தேர்தல்: பலத்த பாதுகாப்பு

சென்னை :ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற உள்ளது. ஓட்டுச் சாவடிகள், ‘சிசிடிவி’ வாயிலாக கண்காணிக்கப்பட உள்ளன. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில், 27 ஆயிரத்து மூன்று உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில், போட்டியின்றி தேர்வு, தேர்தல் நிறுத்தம், தேர்தல் புறக்கணிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஓட்டுப்பதிவு நடக்காதது போக, 23 ஆயிரத்து …

Read More »

விவசாயிகள் பலியான சம்பவம்: அமைச்சர் மற்றும் மகனின் கூட்டுச்சதி என வழக்குப்பதிவு

லக்னோ: உ.பி., மாநிலம் லக்கிம்பூர் கேரி அருகே போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காரை மோதச் செய்து பலர் உயிரிழக்க காரணமான சம்பவத்தில், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் அவரது மகன் ஆஷிஷ் மிஸ்ரா ஆகியோர் கூட்டுச் சதி செய்து ஜீப்பை ஏற்றியதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த ஞாயிறன்று மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் சொந்த கிராமத்திற்கு நிகழ்ச்சி ஒன்றிற்காக …

Read More »
MyHoster