Sunday , October 17 2021
Breaking News
Home / 2021 / October / 04

Daily Archives: October 4, 2021

தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 1,467 ஆக சற்று குறைந்துள்ளது: 1,559 பேர் நலம்

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,531 -ல் இருந்து 1,467ஆக சற்று குறைந்துள்ளது. 16 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,559 பேர் குணமடைந்து உள்ளனர். இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,48,749 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தை சேர்ந்த 1,466 பேருக்கும் கத்தார் நாட்டிலிருந்து வந்த ஒருவர் உள்பட 1,467 பேருக்கு கோவிட் …

Read More »

இரண்டாவது படத்திலே ஜாக்பாட்: நயன்தாரா படத்தில் கமிட்டாகும் பிக்பாஸ் கவின்!

விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ்சார்பில் உருவாகும் புதிய படத்தில் கவின் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான கவினின் நடிப்பில் உருவான ‘லிஃப்ட்’ படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் வினீத் இயக்கியுள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்ற ஆண்டு கொரோனா ஊரடங்கிற்கு முன்பாகவே நிறைவடைந்து விட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஓடிடி தளத்தில் நேரடியாக …

Read More »

45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்தவர்: எஸ்பிபி குறித்து நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்!

‘அண்ணாத்த’ படத்திலிருந்து வெளியாகியுள்ள எஸ்பிபி பாடிய பர்ஸ்ட் சிங்கிள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கும் ‘அண்ணாத்த‘ படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த். இந்த படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் ‘அண்ணாத்த’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியாகி …

Read More »

வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை இருக்கும்போது எதற்காக போராட்டம்?: உச்சநீதிமன்றம் கேள்வி

புதுடில்லி: ‛‛மூன்று வேளாண் சட்டங்களும் இடைக்காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் எதற்காக போராடுகிறீர்கள்?” என விவசாயிகளுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டில்லியில் பல மாதங்களாக தொடர்ந்து விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் கூறியதாவது:   மூன்று வேளாண் சட்டங்களும் இடைக்காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தை …

Read More »

ஓமனில் கரையை கடந்தது ‘ஷாகீன்’ புயல்: கனமழையால் வெள்ளக்காடானது மஸ்கட் நகரம்

மஸ்கட்: ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து 65 கி.மீ., தொலைவில் கடல் பகுதியில், நேற்று காலை மையம் கொண்டிருந்த ஷாகீன் புயல் தெற்கு மற்றும் வடக்கு அல் பத்தினா பகுதியில் கரையைக் கடந்தது. புயலால் பலத்த காற்று வீசியது; ஓமனின் பல்வேறு பகுதிகளில் மிக கனமழை பெய்தது.   குறைந்த நேரத்தில் மிக கனமழை பெய்ததால், மஸ்கட் நகரின் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் வடிய இடமின்றி குளம்போல் …

Read More »

மருத்துவத்துக்கான நோபல் பரிசு; இருவருக்கு பகிர்ந்தளிப்பு

ஸ்டோக்ஹோம்: மருத்துவத்துக்கான நோபல் பரிசு இன்று (அக்.,04) அறிவிக்கப்பட்டது. இதில், அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் ஆகியோருக்கு பகிர்ந்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில் 2021ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் …

Read More »

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரிய மனு; உச்சநீதிமன்றம் தள்ளுபடி

புதுடில்லி: இந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தேர்வெழுதிய மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு செப்டம்பர் 12ம் தேதி தேர்வு நடைபெற்றது. இத்தேர்வுக்கு முன்னதாக உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட …

Read More »

70% பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

புதுடில்லி: இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 70 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று (அக்., 4) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது: உலக அளவில் அதிகளவிலான பொது மருந்துகளை இந்தியா தயாரித்து வருகின்றது. குறிப்பாக, உலகம் முழுவதும் உள்ள 150 நாடுகளுக்கு கோவிட் பெருந்தொற்றுக்கான தடுப்பூசிகளும் மருந்துகளும் ஏற்றுமதி …

Read More »

சிறார்களுக்கு கோவாக்சின்: அறிக்கை சமர்ப்பிப்பு

ஐதராபாத்-சிறார்களுக்கான ‘கோவாக்சின்’ தடுப்பூசியை தயாரித்து, இரண்டு கட்ட பரிசோதனைகளை நிறைவு செய்துள்ள, ‘பாரத் பயோடெக்’ நிறுவனம், பரிசோதனை முடிவுகளை இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பிடம் சமர்ப்பித்துள்ளது.     நம் நாட்டில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. ‘சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா’ நிறுவனத்தின் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியும், ‘பாரத் பயோடெக்’ நிறுவனத்தின் ‘கோவாக்சின்’ தடுப்பூசியும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இரண்டு ‘டோஸ்’களாக செலுத்தப்படுகின்றன. …

Read More »

19 மணி நேரம் உழைக்கும் ஸ்டாலின் நாட்டின் சிறந்த முதல்வர்: குலாம் நபி ஆசாத் பாராட்டு

சென்னை : ”நாட்டில் சிறந்த முதல்வராக ஸ்டாலின் செயல்படுகிறார். மக்களுக்காக அவர், 18 முதல் 19 மணி நேரம் உழைக்கிறார்,” என்று முன்னாள் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் தெரிவித்தார். சென்னையில் திருமண நிகழ்ச்சிக்காக வந்திருந்த குலாம் நபி ஆசாத், நேற்று காலை முதல்வர் ஸ்டாலினை, அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில், தன் மனைவியுடன் சென்று சந்தித்தார். அப்போது, தி.மு.க., – எம்.பி.,க்கள் கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், ஸ்டாலின் மனைவி துர்கா உள்ளிட்டோர் …

Read More »
MyHoster