Sunday , October 17 2021
Breaking News
Home / 2021 / October / 03

Daily Archives: October 3, 2021

காபூலில் குண்டுவெடிப்பு: பொதுமக்கள் பலி

காபூல்: ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள மசூதி அருகே நடந்த குண்டுவெடிப்பில் ஏராளமான பொது மக்கள் உயிரிழந்தனர். ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள மசூதி நுழைவு வாயில் அருகே திடீரென குண்டுவெடித்தது. இந்த சம்பவத்தில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இதனை தலிபான் அமைப்பினர் உறுதி செய்துள்ளனர். எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற உறுதியான தகவலும், குண்டுவெடிப்பிற்கு யார் காரணம் என்ற தகவலும் இதுவரை வெளியாகவில்லை. Share on: …

Read More »

‘உலகின் சிறந்த மருந்தகமாகத் திகழும் இந்தியா’: உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானி

புதுடில்லி: கடந்த 75 ஆண்டுகளாக உலகின் மிகப்பெரிய மருந்தகமாக இந்தியா திகழ்வதாக உலக சுகாதார அமைப்பு தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்துப் பேட்டியளித்த அவர், இந்தியாவின் நான்கு சாதனைகள் குறித்து விளக்கினார். போலியோ நோயை முழுமையாக ஒழித்தது குழந்தைகளுக்கான தடுப்பூசி அறிமுகப்படுத்தியது. கருவில் உள்ள குழந்தைகளின் எதிர்பாரா இறப்பு சதவீதத்தை குறைத்தது உள்ளிட்ட இந்திய மருத்துவத்துறையின் சாதனை காரணமாக தற்போது உலகுக்கே இந்தியா முன்னுதாரணமாக திகழ்கிறது …

Read More »

இது உங்கள் இடம்: சண்டை போடச் சொல்லும் அமைச்சர்!

ஆர்.தாமோதரன், பாபநாசம், நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு போனோமா, தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து பேசி ஓட்டு கேட்டோமா என இல்லாமல், தேவையில்லாதவற்றை பேசி வன்முறையை துாண்டியுள்ளார், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்.’பஸ்சில் நடத்துனர்கள் தரக்குறைவாக நடந்தால், அவர்களை பெண்கள் முறத்தால் அடிக்க வேண்டும்’ என முழங்கி இருக்கிறார். ஊருக்குள் நுழைந்த புலியை, சங்க கால தமிழ் பெண்கள் தங்கள் கையில் வைத்திருக்கும் …

Read More »

இந்தாண்டு 3 முக்கிய செயற்கை கோள்கள் ஏவப்படும்: இஸ்ரோ

புதுடில்லி: இந்தாண்டில் உள்நாட்டு தொழில் நுட்பங்களுடன் பூமியை கண்காணிக்கும் 3 முக்கிய செயற்கைக் கோள்கள் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். முதலில் இ.ஒ.எஸ்-4 (ரைசாட்-1ஏ) மற்றும் இ.ஒ.எஸ்-6 (ஓசியன் சாட்-3) ஆகிய செயற்கைக்கோளும் இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஏவப்பட உள்ளது. அடுத்து இ.ஓ.எஸ்-2 (நுண் செயற்கைக்கோள்) செயற்கைக்கோளான முதல் சிறிய செயற்கைக்கோள் ராக்கெட் (எஸ்.எஸ்.எல்.வி.) மூலம் ஏவப்பட உள்ளது.எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்டில் ஏவப்படும் செயற்கைக்கோளின் செயல்பாடு தகுதி …

Read More »

தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 1,531 ஆக சற்று குறைந்துள்ளது: 1,582 பேர் நலம்

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,578 -ல் இருந்து 1,531 ஆக சற்று குறைந்துள்ளது. 23 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,582 பேர் குணமடைந்து உள்ளனர். இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,50,410 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தை சேர்ந்த 1,530 பேருக்கும் கேரளாவை சேர்ந்த ஒருவர் உள்பட 1,531 பேருக்கு கோவிட் …

Read More »

மும்பை கப்பலில் போதை பார்ட்டி: ஷாருக்கான் மகன் ஆர்யன் கைது

மும்பை: மும்பை கடற்கரையில் கப்பலில் போதை ஒழிப்பு போலீசார் நடத்திய ரெய்டில் பல கோடி மதிப்புள்ள போதை பொருள் சிக்கியது. இதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் உள்ளிட்ட 8 பேரிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் ஆர்யன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மஹாராஷ்ட்டிராவில் தற்போது போதைபொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து போதை ஒழிப்பு போலீசார் கூடுதல் …

Read More »

சொந்த நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த ஓய்வு பெற்ற மாவட்ட கலெக்டர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

வாணியம்பாடி:வாணியம்பாடி அருகே விவசாய நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த ஓய்வுபெற்ற மாவட்ட கலெக்டர் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இன்று உயிரிழந்தார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், வடக்குப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (70). இவர் நாமக்கல், திருவள்ளுர் மாவட்ட கலெக்டராகவும், வணிக வரித்துறையின் இணை இயக்குநராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். பணி ஓய்வுக்குப் பிறகு சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர், தனது சொந்த கிராமமான வாணியம்பாடி அடுத்த வடக்குப்பட்டு கிராமத்தில் …

Read More »

காதிகிராப்ட்டில் கோலாகலம்; காந்தி மியூசியம் அலங்கோலம்!தேசத்தந்தை பிறந்தநாளில் வேதனையான முரண்பாடு

தேச விடுதலைப் போராட்டத்தில் கொங்கு மண்ணுக்கென்று பெரும் பங்குண்டு. சிதம்பரனார் செக்கிழுத்ததும், தேசிய கீதமாக அறிவிக்கப்படும் முன்னே ஜனகனமன முதல்முறை தாகூரால் பாடப்பட்டதும் இங்கேதான்.     என்.ஜி.ராமசாமி, சி.சுப்ரமணியம், கதர் அய்யாமுத்து, கோவை சுப்ரி, சி.வி.சுப்பையா, அப்துல் ரஹீம், ஜி.கே.சுந்தரம், ஆர்.கே.சண்முகம் செட்டியார், அவிநாசிலிங்கம் செட்டியார், வெள்ளிங்கிரி கவுண்டர்…என இந்த மண்ணிலிருந்து தேச விடுதலைக்காக தீவிரமாகப் போராடியவர்களின் பட்டியல் வெகுநீளம். தேசத்தந்தை இரண்டு முறை பாதம் பதித்த பாக்கியமும் …

Read More »

கோவிட் தொற்றுக்கு 2.7 லட்சம் பேருக்கு சிகிச்சை: 199 நாட்களுக்கு பின் குறைவு

புதுடில்லி: இந்தியாவில், கோவிட் பாதிப்புடன் 2.70,557 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது 199 நாட்களுக்கு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை இதுவே குறைவாகும். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,842 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 3,38,13,903 ஆக உயர்ந்தது. 25,930 பேர் குணமடைந்தனர்.இதன் மூலம் மீண்டவர்களின் எண்ணிக்கை 3,30,94,529 ஆனது. …

Read More »
MyHoster