Sunday , October 17 2021
Breaking News
Home / 2021 / October / 02

Daily Archives: October 2, 2021

தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 1,578 ஆக சற்று குறைந்துள்ளது: 1,607 பேர் நலம்

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,597-ல் இருந்து 1,578 ஆக சற்று குறைந்துள்ளது. 24 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,607 பேர் குணமடைந்து உள்ளனர். இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,51,855 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தை சேர்ந்த 1,578 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை …

Read More »

கட்காரி சிறந்த உதாரணமாக திகழ்கிறார்: சரத்பவார் பாராட்டு

புனே: ”மக்கள் பிரதிநிதிகள், நாட்டின் வளர்ச்சிக்காக எப்படி பணியாற்றலாம் என்பதற்கு நிதின் கட்காரி சிறந்த உதாரணமாக திகழ்கிறார்” என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார். மஹாராஷ்டிரா மாநிலம் அஹமத் நகரில், மத்திய அரசின் திட்டங்கள் துவக்க விழாவில் அமைச்சர் நிதின் கட்காரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் சரத்பவார் பேசியதாவது: அஹமத் நகரில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள திட்டங்களை, நிதின் கட்காரி …

Read More »

லடாக் எல்லையில் படைகளின் தயார்நிலை குறித்து ராணுவ தளபதி ஆய்வு

புதுடில்லி: சீனாவுடனான எல்லைப் பிரச்சனை நீடித்து வரும் நிலையில், கிழக்கு லடாக்கின் பல்வேறு எல்லைப் பகுதிகளை ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம். நரவணே பார்வையிட்டார்.     கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி அருகே கடந்த ஆண்டு மே மாதம் சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டது. அப்போது இரு நாடுகளிடையே மோதல் தொடங்கியது. இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர இரு நாடுகளும் தூதரக அளவிலும், ராணுவ அதிகாரிகள் இடையேயும் …

Read More »

கோவிஷீல்டு செலுத்தினேன்… உயிர் பிழைத்தேன்: ஐ.நா., தலைவர்

ஜெனிவா: ‘கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு தவணைகளை செலுத்திக் கொண்டேன்; அதனால் உயிர் பிழைத்துவிட்டேன்’ என, ஐ.நா., தலைவர் அப்துல்லா ஷாகித் தெரிவித்துள்ளார்.   ஐ.நா., பொதுச் சபையின் தலைவராக மாலத்தீவைச் சேர்ந்த அப்துல்லா ஷாகித் பொறுப்பேற்று உள்ளார். அவரது முதல் செய்தியாளர் சந்திப்பு நேற்று (அக்., 1) நடைபெற்றது. அதில், ‘ஏதெனும் கோவிட் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்க வேண்டி உள்ளதா; உலக சுகாதார அமைப்பு ஏதெனும் தடுப்பூசிக்கு அனுமதி வழங்க …

Read More »

ஆட்கொல்லி புலியை பிடிக்க அதிரடிப்படை வேட்டை துவக்கம்

கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர், தேவன் தனியார் எஸ்டேட் பகுதியை சேர்ந்த, சந்திரன், 51, என்பவரை, 24ம் தேதி தாக்கி கொன்ற புலியை, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், அந்த புலி நேற்று, காலை மசினகுடி பகுதிக்கு சென்றது. வனத்துறையினர், மசினகுடி மன்றாடியார் வனப் பகுதியில் தேடினர். மசினகுடி, கல்குவாரி அருகே , மாடு மேய்த்துக் கொண்டிருந்த , குறும்பர் பாடியை சேர்ந்த , மங்களபசுவன், …

Read More »

அப்போ அவ்வளவு தானா…:’மினி கிளினிக்’குகள் திட்டத்துக்கு மூடுவிழா? தொடங்கிய வேகத்திலேயே முடங்கிப் போனது

பெ.நா.பாளையம்; கடந்த ஆட்சியின் போது, தமிழகத்தில் கிராமம் மற்றும் நகர்புற மக்களுக்காக துவக்கப்பட்ட, அம்மா ‘மினி கிளினிக்’குகள் திட்டம் முடங்கியுள்ளன. இந்த ஆட்சியில் ‘மக்களை தேடி மருத்துவம்’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளதால், ‘மினி கிளினிக்’குகள் திட்டம் உயிர்ப்புடன் இருக்குமா என்பது சந்தேகம் தான் என, சுகாதாரத்துறை அதிகாரிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். ஏழை, எளிய மக்கள், குறிப்பாக, கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள், தரமான மருத்துவ சேவையை இலவசமாக பெற …

Read More »

பொது, சரக்கு போக்குவரத்தில் 100% பசுமை எரிசக்தி: மத்திய அரசு உறுதி

புதுடில்லி: ‘பசுமை மற்றும் தூய்மை எரிசக்திக்கு, பொது மற்றும் சரக்கு போக்குவரத்தை 100 சதவீதம் மாற்ற, மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது’ என, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சர்வதேச வாகன தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது: கார்பன் வெளியீட்டை முற்றிலும் குறைக்க வேண்டும் என்ற இலக்கை அடைய உதவும் ஒரே எரிபொருள் பசுமை ஹைட்ரஜன்தான். …

Read More »

கோவிட்டில் இருந்து மீள்வோர் விகிதம் 97.86%

புதுடில்லி: கோவிட்டில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 97.86 சதவீதமாக உள்ளது. கோவிட் பரவலுக்கு பிறகு, குணமடைவோர் எண்ணிக்கை, அதிகரிப்பது நிம்மதியை தந்திருக்கிறது. இந்தியாவில் கோவிட் பாதிப்பு காரணமாக 2,73,889 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, கடந்த 197 நாட்களுக்கு பிறகு குறைவாக பதிவாகி உள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் விகிதம் 0.81 சதவீதமாக உள்ளது. இது மார்ச் 2020க்கு பிறகு, தற்போது தான் இந்த …

Read More »

பின்லாந்தில் மிங்க் வகை கீரிகளுக்கு கோவிட் தடுப்பூசி!

ஹெல்சின்கி: பின்லாந்து அரசு, மிங்க் வகை கீரிகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்த முடிவு செய்துள்ளது. பின்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மிங்க் வகை கீரிகள் பரவலாகக் காணப்படுகின்றன. இவற்றின் அடர்த்தியான ரோமத்தில் குளிருக்கு இதமான ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. மிங்க் கீரிகளிடம் இருந்து புதுவகை கோவிட் வைரஸ் உருவாக வாய்ப்பு உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்தன. இதனால் இந்த வகை கீரிகள் அழிக்கப்பட்டன. குறிப்பாக டென்மார்க்கில், 3ல் 2 மடங்கு மிங்குகள் …

Read More »

இது உங்கள் இடம்: காவல்துறையை தடுப்பது ஆளுங்கட்சியினரா, அதிகாரிகளா, செல்வாக்கா? ‘மில்லியன் டாலர்’ கேள்வி!

அ.முத்துராமன், களக்காடு, நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: தமிழகத்தில் அதிரடி நடவடிக்கை வாயிலாக 36 மணி நேரத்தில் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 929 கத்திகள் மற்றும் ஐந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இந்த அதிரடி நடவடிக்கையை காவல்துறை எடுத்திருக்காவிட்டால், அந்த 2,512 ரவுடிகளும் அன்றாடம் நாட்டின் ஏதாவது ஒரு இடத்தில் குற்றச்செயல்களை அரங்கேற்றி இருப்பர். அதில் எத்தனை கொலை சம்பவங்களோ… …

Read More »
MyHoster