Sunday , October 17 2021
Breaking News
Home / 2021 / October / 01

Daily Archives: October 1, 2021

தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 1,597 ஆக சற்று குறைந்துள்ளது: 1,623 பேர் நலம்

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,612-ல் இருந்து 1,597 ஆக சற்று குறைந்துள்ளது. 25 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,623 பேர் குணமடைந்து உள்ளனர்.     இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,53,288 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தை சேர்ந்த 1,597 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கோவிட்டினால் …

Read More »

தடுப்பூசி போட ஆதார் கேட்பதற்கு எதிராக மனு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

புது டில்லி: கோவிட் தடுப்பூசி மையங்களிலும், தடுப்பூசிக்கு பதிவதற்கான கோவின் போர்ட்டலிலும் ஆதார் எண்ணை கட்டாயமாக கேட்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்தார். அம்மனு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புனேவைச் சேர்ந்த வழக்கறிஞரும், சமூகச் செயற்பாட்டாளருமான சித்தார்த் சங்கர் என்பவர் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், “மத்திய சுகாதார அமைச்சகம் சமீபத்தில் …

Read More »

5 போலீசாருக்கு காந்தியடிகள் காவலர் விருது : முதல்வர்

சென்னை: கள்ளச்சாராய ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 5 போலீசார்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது வழங்கப்பட உள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: கள்ளச்சாராய ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 5 போலீஸ் போலீசார்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார். வரும் 2022 ம் ஆண்டின் குடியரசு தின விழாவின் போது இந்த விருது வழங்கப்பட உள்ளது. விருதுடன் ரொக்கப்பணம் தலா ரூ.40 ஆயிரம் …

Read More »

கோவிட்: இந்தியாவில் மேலும் 28 ஆயிரம் பேர் குணம்

புதுடில்லி: இந்தியாவில் மேலும் 28 ஆயிரம் பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கோவிட் நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள்: இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 97.86 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.33 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 0.81 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். தடுப்பூசி இந்தியாவில் இன்று (அக்டோபர் 01) காலை 8 மணி நிலவரப்படி 89.02 கோடி …

Read More »

தலைவர்களுக்கு மாலை போட கடன்: தி.மு.க., வேட்பாளர்கள் புலம்பல்

வேலுார்: தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளதால், பிரசாரத்திற்கு வரும் தலைவர்களுக்கு மாலை போட தி.மு.க., வேட்பாளர்கள் கடன் வாங்கி வருவதாக புலம்புகின்றனர். வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. ஓட்டு பதிவு வரும் 6, 9 ம் தேதிகள் நடக்க உள்ளதால், குறைவாக நாட்களே இருப்பதால் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க., சார்பில் தீவிர பிரசாரத்தில் குதித்துள்ளனர். இதற்காக அந்தந்த தொகுதி தேர்தல் …

Read More »

மக்களின் ஆதரவு இருப்பதால் ஐ.நா., எங்களை அங்கீகரிக்க வேண்டும்: தலிபான்கள் கோரிக்கை

காபூல்: ‘ஆப்கன் மக்களின் ஆதரவு எங்களுக்கு இருப்பதால், ஐ.நா., எங்களை அங்கீகரிக்க வேண்டும்’ என, தலிபான்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.   ஐ.நா.,வின் நிரந்தரப் பிரதிநிதியாக ஆப்கானிஸ்தான் சார்பில் முஹம்மது சுஹைல் ஷாஹீனை தலிபான்கள் நியமித்தனர். பின்னர், ஐ.நா., பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க தலிபான்கள் அனுமதி கோரினார். ஆனால், அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில், சுஹைல் ஷாஹீன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஆப்கனில் இப்போது இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆப் …

Read More »

நான்கு மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் (3.1 கி.மீ உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று, நாளை (அக்.,01, 02): புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் டெல்டா மாவட்டங்களில் …

Read More »

குப்பையில்லா நகரங்களே இலக்கு: பிரதமர்

புதுடில்லி: ‛‛ தூய்மை இந்தியா 2.0” இயக்கத்தின் நோக்கம் குப்பையில்லாத நகரங்களே ” என பிரதமர் மோடி கூறியுள்ளார். டில்லியில் நடந்த விழாவில், அனைத்து நகரங்களும் குப்பையில்லாததாகவும், பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும் தூய்மை பாரத் இயக்கம் 2.0 மற்றும் அம்ருத் 2.0 ஆகிய திட்டங்களை நரேந்திர மோடி துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: குப்பையில்லா நகரங்களே தூய்மை இந்தியா 2.0 இயக்கத்தின் நோக்கம் ஆகும். இந்த …

Read More »

ஏர் இந்தியா நிறுவனத்தை 67 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கைப்பற்றும் டாடா குழுமம்!

புதுடில்லி: ‘நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை வாங்கும் ஏலத்தில், டாடா சன்ஸ் நிறுவனம் வெற்றி பெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா தொடர்ந்து வருவாய் இழப்பில் இயங்கி வந்தது. இதனால், அந்நிறுவனத்தை விற்க, கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. ஆனால், அந்நிறுவனத்தின் கடன் சிக்கல் உள்ளிட்ட காரணங்களால் அதை வாங்க யாரும் முன்வரவில்லை. மேலும், கோவிட் …

Read More »

ஜி.எஸ்.டி.,. வசூல் தொடர்ந்து அதிகரிப்பு: 1 லட்சம் கோடியை தாண்டி சாதனை

புதுடில்லி: ஜிஎஸ்டி வசூல் தொடர்ச்சியாக மூன்று மாதமாக ரூ. 1 லட்சம் கோடியை தாண்டியது. செப்., மாதம் ரூ.1.17 லட்சம் கோடி வசூல் ஆகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இது 2020 செப்., ல் வசூலான தொகையை விட 23 சதவீதம் அதிகம் ஆகும். மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: செப்., வசூலான ரூ.1,17,010 கோடியில், சிஜிஎஸ்டி -ரூ.20,578 கோடி எஸ்ஜிஎஸ்டி …

Read More »
MyHoster