Sunday , October 17 2021
Breaking News
Home / 2021 / September

Monthly Archives: September 2021

அருவருக்கத்தக்க செயல்: கபில் சிபல் வீடு தாக்கப்பட்டதற்கு ஆனந்த் சர்மா கண்டனம்

புதுடில்லி: காங்கிரஸ் மேலிடத்தை விமர்சித்த காரணத்தால் நேற்றிரவு கபில் சிபல் வீடு, கார் அக்கட்சி இளைஞரணியினரால் தாக்கப்பட்டது. இச்சம்பவம் அதிர்ச்சியும், அருவருப்பையும் ஏற்படுத்துவதாக கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கண்டித்துள்ளார். முழு நேர தலைமை இல்லாத காங்கிரஸ் கட்சி கடந்த 2 ஆண்டுகளாக திரிசங்கு நிலையில் உள்ளது. காங்கிரஸ் ஆட்சி செய்த சொற்ப மாநிலங்களில் சிலவும் ஏற்கனவே கை நழுவிப் போய்விட்ட நிலையில், பஞ்சாப், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களிலும் …

Read More »

ஊழல் வழக்கில் பிரான்ஸ் முன்னாள் அதிபருக்கு சிறை

பாரீஸ்: கடந்த 2012 ம் ஆண்டு நடந்த தேர்தலில் பிரசாரத்தின் போது முறைகேடாக நிதியுதவி வந்ததாக தொடரப்பட்ட வழக்கில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. கடந்த 2007ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை பிரான்ஸ் அதிபராக இருந்தவர் நிக்கோலஸ் சர்கோஸி. 2012ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது, முறைகேடாக நிதியுதவி வந்ததாக புகார் எழுந்தது. …

Read More »

‘நான் கேப்டன் அமரீந்தர் சிங் அல்ல..!’ – கால்பந்து வீரர் டுவீட்..!

சண்டிகர்: காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் சித்து உடனான மோதல் காரணமாக பஞ்சாப் முதல்வராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். இதனையடுத்து அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் சேர உள்ளதாக தகவல் பரப்பப்பட்டது. ஆனால் இதுகுறித்து விளக்கமளித்த அமரீந்தர் சிங் தான் காங்கிரஸிலிருந்து விலக முடிவு எடுத்தாலும் பாஜ.,வில் சேரப் போவதில்லை என்று உறுதிபட தெரிவித்துள்ளார். மேலும் தற்போது தான் காங்கிரஸ் …

Read More »

சத்ய சாய் அறக்கட்டளை சார்பில் நவீன தகனமேடை வசதி

புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளை சார்பில் கட்டி முடிக்கப்பட்ட ஒரு நவீன காஸ் தகன மேடை வசதி புட்டபர்த்தி நகர மக்கள் பயன்படுத்தி கொள்ள ஒப்படைக்கப்பட்டது. மேலாண்மை அறங்காவலர், ஸ்ரீ ஆர்.ஜே. ரத்னாகர் உள்ளூர் அதிகாரிகளுக்கு இதன் செயல்பாட்டு அம்சங்கள் மற்றும் வசதிகளை விளக்கி இந்த நவீன தகன வசதியை ஒப்படைத்தார். ‛அமர்தம்’ என இந்த எரியூட்டல் மையத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. ரூ. 3 கோடிக்கும் மேல் செலவில் இரண்டு …

Read More »

கூட்டணி வைத்து போட்டியிட்ட கட்சிகள் காணாமல் போய் விட்டன: சீமான்

திருப்பத்துார்: கூட்டணி வைத்து போட்டியிட்ட கட்சிகள் காணாமல் போய் விட்டதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டத்தில் பங்கேற்க திருப்பத்துார் வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நமக்கு முன்பு தனித்து போட்டியிட்ட வைகோ, திருமாவளவன், விஜயகாந்த் வளர்ந்து வரும் நேரத்தில் கூட்டணி வைத்து போட்டியிட்டதால் காணாமல் போய் விட்டன. அதே போல நான் செல்ல மாட்டேன். …

Read More »

கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்பு அக்., 4 முதல் துவக்கம்

சென்னை: கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரும் அக்.,4 ம் தேதி முதல் நேரிடையாக வகுப்புகள் துவங்கும் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்து இருப்பதாவது: அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை முடிவடைந்து உள்ளது. உரிய வழி காட்டு நெறிமுறைகளுடன் அக்.,4 ம் தேதி முதல் நேரிடையாக வகுப்புகளை துவங்க வேண்டும். மாணவர்கள் தடுப்பசி செலுத்தி இருப்பதை …

Read More »

சீட்டு கட்டு போல் சரிந்து விழுந்த அடுக்குமாடி கட்டடம்

சிம்லா: இமாச்சலில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து தரைமட்டமானது. முன்னெச்சரிக்கையாக மக்கள் வெளியேற்றப்பட்டனர்.. இமாச்சல் பிரதேசம், கட்சிகாட்டி என்ற மலைப் பகுதியில் 8 அடுக்கு அப்பார்மென்ட் உள்ளது. இந்த கட்டடம் மிகவும் அபாயகரமாக உள்ளதால் கடந்த சில நாட்களுக்கு முன்பே மாநகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து குடியிருப்பு வாசிகளை வெளியேற உத்தரவிட்டது. இதையடுத்து கட்டடம் வலுவிழந்து இன்று (செப்.30) சீட்டு கட்டு சரிந்து விழுவது போன்று சரிந்து விழுந்தது. இதன் …

Read More »

தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 1,612 ஆக சற்று குறைந்துள்ளது: 1,626பேர் நலம்

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,624-ல் இருந்து 1,612 ஆக சற்று குறைந்துள்ளது. 28 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,626 பேர் குணமடைந்து உள்ளனர். Share on: WhatsApp

Read More »

இது உங்கள் இடம்: கமல் கட்சி ஆட்சிக்கு வராததால் தமிழகம் பிழைத்தது!

ஆ.கண்ணன், களக்காடு, நெல்லை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: எம்.ஜி.ஆர்., வள்ளல் குணம் மிக்கவர். அதனால் தான் அவரை, மக்கள் தங்கள் தலைவராக கொண்டாடினர். மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல், தேர்தல் பிரசாரத்தின் போது, ‘நான் எம்.ஜி.ஆரின் நீட்சி’ என்றார்; அதை ஏற்று கொள்ள முடியவில்லை. எம்.ஜி.ஆரிடம் இருக்கும் எந்த குணம் கமலிடம் இருக்கிறது?   கடந்த 2021 சட்டசபை தேர்தலின் போது, இவரது வேட்பு மனுவில் காட்டிய சொத்தின் …

Read More »

இந்தியாவில் ரூ.1,000 கோடிக்கு சொத்து வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது!

புது டில்லி: இந்தியாவில் முதல் முறையாக ரூ.1,000 கோடிக்கு சொத்து வைத்திருக்கும் தனிநபர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. ஐ.ஐ.எப்.எல்., வெல்த் மற்றும் ஹூருன் இந்தியாவின் 2021-க்கான பணக்காரர்கள் பட்டியலில் இத்தகவல் வெளியாகியுள்ளது. மேற்சொன்ன நிறுவனத்தின் அறிக்கையின் படி, 119 நகரங்களைச் சேர்ந்த 1007 பேர் ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொந்தக்காரர்கள். இப்பட்டியலில் 894 நபர்களின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. அதில் 229 பேர் புது முகங்கள். 113 பேரின் சொத்து …

Read More »
MyHoster