Breaking News
Home / 2021 / February / 22

Daily Archives: February 22, 2021

கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது – அமைச்சர் ஜெயக்குமார்

கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உள்ளிட்ட அனைத்து பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று கொண்டிருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்..!! சென்னை திருவல்லிக்கேணியில் அம்மா மினி கிளினிக் கட்டிடத்தை திறந்து வைத்த பின்னர் நிருபர்களிடம்  அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-  கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உள்ளிட்ட அனைத்து பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று  வருகிறது. உரிய நேரத்தில் கட்சித் தலைமை தொகுதிப் பங்கீடு விவரத்தை முறைப்படி அறிவிக்கும் என்றார். தமிழகத்தில் தேர்தல் அறிவிப்புக்கு முன், திமுக – …

Read More »

பிரதமர் மோடி 25ந்தேதி பிரசாரம்- போலீஸ் கட்டுப்பாட்டில் கோவை கொடிசியா வளாகம்

பிரதமர் மோடி வருகையையொட்டி கோவையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள கொடிசியா வளாகம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..!! கோவை: கோவை கொடிசியா வளாகத்தில் வருகிற 25-ந் தேதி தமிழக பா.ஜனதா கட்சி சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். பிரதமர் மோடி கோவை வருகையையொட்டி கோவையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு …

Read More »

ஜெயலலிதா பிறந்த நாள்; அதிமுகவைக் காக்க தீபம் ஏற்றி உறுதிமொழி ஏற்க வேண்டும்: தொண்டர்களுக்கு ஓபிஎஸ் – ஈபிஎஸ் வேண்டுகோள்

ஜெயலலிதா பிறந்த நாள்; அதிமுகவைக் காக்க தீபம் ஏற்றி உறுதிமொழி ஏற்க வேண்டும்: தொண்டர்களுக்கு ஓபிஎஸ் – ஈபிஎஸ் வேண்டுகோள்..!! ஜெயலலிதா பிறந்த நாளன்று, அதிமுகவினர் தங்கள் வீடுகளில் மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றி உறுதிமொழி ஏற்க வேண்டுமென, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக, ஓபிஎஸ்-ஈபிஎஸ் …

Read More »

ஆசியாவிலேயே பெரிய கால்நடைப் பூங்கா திறப்பு!

ஆசியாவிலேயே பெரிய கால்நடைப் பூங்கா திறப்பு..!! சேலம் அருகே உள்ள தலைவாசலில் கட்டப்பட்டுள்ள கால்நடைப் பூங்காவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி ஆகியவை ரூபாய் 1,022 கோடியில் கட்டப்பட்டுள்ளன. இந்தக் கால்நடை பூங்கா 1,100 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், கால்நடை பண்ணைப் பிரிவு, கால்நடை உற்பத்திப் பொருட்கள் பதப்படுத்துதல் பிரிவு, மீன்வளப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. …

Read More »

வேலூர், குடியாத்தத்தில் 3 சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

வேலூர், குடியாத்தத்தில் 3 சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது..!! வேலூர்   வேலூரை அடுத்த கோவிந்தரெட்டிப்பாளையத்தில் 18 வயது நிரம்பாத சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதாக நேற்று முன்தினம் மாவட்ட சைல்டு லைன் அலுவலகத்துக்கு புகார் வந்தன. அதன்பேரில் சைல்டு லைன் அலுவலர்கள், அரியூர் போலீசார் உடனடியாக அங்கு சென்று விசாரித்தனர்.  அதில், 16 வயது சிறுமிக்கு நேற்று திருமணம் நடக்க இருந்தது. அதையடுத்து அந்த திருமணத்தை அதிகாரிகள் …

Read More »

பதவியை ராஜினாமா செய்கிறார் முதல்வர். அரசியலில் உச்ச கட்ட பரபரப்பில்.!!!

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி துணைநிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளார்...!!! புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்துள்ளார். அதனால் புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. பேரவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வியில் முடிந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியால் நாராயணசாமி பேரவையில் இருந்து வெளியேறினார். இதனையடுத்து 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றுமொரு திமுக எம்எல்ஏ …

Read More »

“இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று அரசியலுக்கு வருகிறேன்” – ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம்

“இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று அரசியலுக்கு வருகிறேன்” – ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம்..!! தமிழக அரசியலில் முழுமையாக களம் இறங்க இருக்கிறேன் என்ற ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அறிவித்துள்ளார். சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தில் ஊழலை ஒழிக்க “அரசியல் களம் காண்போம்” எனும் தலைப்பில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம், மதுரை ஆட்சியராக இருந்த போதும் சரி, கோஆப் டெக்ஸில் …

Read More »

சட்டசபையில் நாளை இடைக்கால பட்ஜெட்; ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்

மிழக சட்டசபையில் நாளை (செவ்வாய்க்கிழமை) இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். அதில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருக்கிறது..!! சட்டசபை கூட்டம் தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம், கடந்த 2-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, 3 நாட்கள் நடைபெற்ற கூட்டத்தில், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.12 ஆயிரத்து 110 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.மேலும், பெண்கள்-குழந்தைகளுக்கு எதிரான …

Read More »

முக்கிய அறிவிப்பு! வரும் 25ஆம் தேதி அதிரடி காட்ட இருக்கும் சசிகலா!!

முக்கிய அறிவிப்பு! வரும் 25ஆம் தேதி அதிரடி காட்ட இருக்கும் சசிகலா..!! அமமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 25ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைமை தெரிவித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா விடுதலையாகி சென்னையில் உள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு அவர் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. கொரோனா பாதிப்பு ஏற்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால் வீட்டில் ஓய்வு எடுத்து …

Read More »

புதுச்சேரியில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: காங்கிரஸ் நாராயணசாமி அரசு நீடிக்குமா?

புதுச்சேரியில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: காங்கிரஸ் நாராயணசாமி அரசு நீடிக்குமா? சட்டப்பேரவை உறுப்பினர்களின் அடுத்தடுத்த பதவி விலகல்களைத் தொடர்ந்து, நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி அரசு இன்று காலை 10 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதாக நாராயணசாமி அரசு கூறினாலும், தங்களுக்கும் வாக்களிக்கும் உரிமை உள்ளது என்கின்றனர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மூன்று நியமன உறுப்பினர்கள். இவர்கள் வாக்கெடுப்பில் பங்கெடுத்தால் நாராயணசாமி அரசு …

Read More »
MyHoster