Breaking News
Home / 2021 / February / 20

Daily Archives: February 20, 2021

மனம் திருந்தியவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றிய, திருவள்ளூர் ஆட்சியர்

மனம் திருந்தியவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றிய, திருவள்ளூர் ஆட்சியர்..!! திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்களின் மறுவாழ்விற்காக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மற்றும் எஸ்.பி அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மாவட்டம் முழுவதும் கஞ்சா, குட்கா விற்பனை உள்ளிட்ட பல்வேறு மதுவிலக்கு குற்றச் செயல்களில் ஈடுபட்டு, …

Read More »

பல நாடுகளுக்கு செல்லும் பிரதமருக்கு , விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க நேரமில்லை – பிரியங்கா காந்தி

பல நாடுகளுக்கு செல்லும் உலகெங்கிலும் பல்வேறு நாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடி, ஆனால் விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க நேரமில்லை என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்...!! உத்திரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உரையாற்றினார்.அவரது உரையில், தலைநகர் டெல்லி அருகே விவசாயிகள் 90 நாட்களாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராடி வரும் விவசாயிகளில் 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.போராடி வரும் விவசாயிகளுக்கு மின்சாரம் …

Read More »

நாடாளுமன்ற ஆவணங்களை தமிழில் வழங்குக!: குடியரசு துணைத்தலைவருக்கு வி.சி.க. எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தல்..!!

நாடாளுமன்ற ஆவணங்களை தமிழில் வழங்குமாறு குடியரசு துணைத்தலைவருக்கு விடுதலை சிறுத்தைகள் எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். சென்னை:- இந்தியாவின் தொன்மையான தமிழ் மொழியை மத்திய அரசு புறக்கணிப்பதாக ரவிக்குமார் கடிதத்தில் புகார் அளித்துள்ளார். தாய் மொழி நாளையொட்டி எம்.பி.களுக்கு வெங்கய்யா நாயுடு அவரவர் தாயமொழிகளில் கடிதம் எழுதி இருந்தார். குடியரசு துணைத்தலைவருக்கு பதில் கடிதம் அனுப்பிய ரவிக்குமார் தாய்மொழியில் கடிதம் எழுதியதற்கு நன்றி கூறியிருந்தார். இந்து, சமஸ்கிருதம் மீது காட்டும் அக்கரையில் …

Read More »

ஆற்காடு தாசில்தாரின் தொடரும் அதிரடிகள்..!!

ஆற்காடு தாசில்தார் அவர்களின் தொடரும் அதிரடி நடவடிக்கைகள்..!!  இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம் திமிரி உள் வட்டம், விளாப்பாக்கம் மதுரா தத்திரவாடி கிராமத்தை சார்ந்த பத்மா க/பெ. விஸ்வநாதன் என்பவர் சர்வே எண்.398/6A1-யில் தெருவை ஆக்கிரமித்து இரும்பு தகடுகளை வைத்து ஆக்கிரமித்து அடாவடி செய்து வந்துள்ளார்.                           பொதுமக்கள் கேட்டால் அவர்களிடம் வம்பு வளர்த்து …

Read More »

கடலூர் ரவுடி தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் சரண்

கடலூர் ரவுடி தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் சரண்..!! கடலூரைச் சேர்ந்த ரவுடி வீரா கடந்த 16ஆம் தேதி தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து கடலூர் திருப்பாப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரா கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கிருஷ்ணன் குடுமியான்குப்பம் பகுதியில் பதுங்கியிருந்த போது அவரை போலீசார் கைது செய்ய …

Read More »

சாலை பாதுகாப்பினை பொது மக்களிடத்தில் எடுத்துரைத்து போக்குவரத்து விழிப்புணர்வில் அசத்தி வரும் புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலர்

சாலை பாதுகாப்பினை பொது மக்களிடத்தில் எடுத்துரைத்து போக்குவரத்து விழிப்புணர்வில் அசத்தி வரும் புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலர்..!!    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஓட்டுநர் உரிமம், நடத்துனர் உரிமம், வாகன உரிமம் மற்றும் போக்குவரத்து அலுவலகத்தால் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி வாகன விபத்தை எப்படி தவிர்ப்பது மற்றும் தலைகவசத்தின் தேவை என போக்குவரத்தின் அனைத்து விழிப்புணர்வுகளையும் பயனாளர்களான மக்களின் மத்தியில் வரிசை படி நிறுத்தி ஒரு …

Read More »

அதிமுக வாக்குகளை பிரிக்க சசிகலா திட்டம் : திமுகவை வெற்றிபெற வைக்க தினகரன் முயற்சி!!

அதிமுக வாக்குகளை பிரிக்க சசிகலா திட்டம் : திமுகவை வெற்றிபெற வைக்க தினகரன் முயற்சி..!! சென்னை: பொது எதிரியான திமுகவை வீழ்த்த இணைந்து செயல்பட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் தோழி சசிகலா சிறையில் இருந்து விடுதலையானவுடன் கூறினார். ஆனால், அவரது பெயரைச் சொல்லி கட்சி நடத்தும் டிடிவி தினகரன் அவரது தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 2021 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று …

Read More »

நரிக்குறவர்களுக்கு விண்ணப்பித்த ஒரு வாரத்தில் வாக்காளர் அடையாள அட்டை

நரிக்குறவர்களுக்கு விண்ணப்பித்த ஒரு வாரத்தில் வாக்காளர் அடையாள அட்டை..!! திருவள்ளூர் நரிக்குறவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்களிடம் நேரில் விண்ணப்பம் பெற்று ஒரு வாரத்திற்குள் தேர்தல் ஆணைய அனுமதி பெற்று வண்ண வாக்காளர் அடையாள அட்டைகளை கோட்டாட்சியர் ப்ரீத்தி பார்கவி வருவாய்த்துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று வழங்கினார். திருவள்ளூர் அருகே கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அதிகத்தூர் ஊராட்சியைச் சேர்ந்தது நரிக்குறவர் மற்றும் இருளர் காலனி உள்ளது. இந்த காலனிகளில் 18 …

Read More »

காவேரிப்பாக்கத்தில் ஆமை வேகத்தில் 6 வழிச்சாலை பணி-விரைந்து முடிக்க கோரிக்கை

காவேரிப்பாக்கத்தில் ஆமை வேகத்தில் 6 வழிச்சாலை பணிகள் நடந்து வருகிறது..!! காவேரிப்பாக்கம் :  காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தங்க நாற்கர சாலை திட்டம் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த தேசிய நெடுஞ்சாலை பணிகள்  சில பகுதிகளில் ஆறு வழிச்சாலையாகவும், சில பகுதிகளில் நான்குவழிச்சாலையாகவும் பயன்பாட்டில்  இருந்து வருகின்றன. மேலும்  ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா டோல்கேட் பகுதியில் இருந்து, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் டோல்கேட் வரை 4 …

Read More »

ரஜினி- கமல் திடீர் சந்திப்பு: ஆதரவை கேட்டாரா?

நடிகர் ரஜினிகாந்தை மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் திடீரென சந்தித்து பேசினார். தனது நாற்பாதாண்டு கால நண்பரை கரோனா தொற்றுக்குப்பின் சந்தித்த கமல் அரசியல் ரீதியாக தனது கட்சிக்கு ஆதரவை கேட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது..!!   திரையுலகில் எம்ஜிஆர் சிவாஜிக்குப்பின் ஆதிக்கம் செலுத்திய கமல் ரஜினி இருவரும் திரையுலகில் போட்டியிலிருந்தாலும் தனிப்பட்ட முறையில் தீவிர நட்பு பாராட்டி வந்தனர். அரசியலுக்கு வருவேன், வருவேன் என ரஜினி கூறி வந்தாலும் திடீரென …

Read More »
MyHoster