பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கும் அடிமை அரசுக்கும் பாடம் புகட்டும் தேர்தல் இது என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேச்சு..!! மதுரையில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெறும் அரசியல் எழுச்சி மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியபோது: தொழிலாளர்களின் தோழனாகவும், பாட்டாளிகளின் பாதுகாவலானாகவும் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் பேச வாய்ப்பளித்தமைக்கு நன்றி. இது இந்திய கம்யூனிஸ்ட் மாநாடாக இருந்தாலும் திமுக மாநாட்டில் …
Read More »Daily Archives: February 19, 2021
கூடங்குளம், சிஏஏ போராட்டம், கரோனா வழக்குகள் வாபஸ் : ராமதாஸ் வரவேற்பு..!!
கூடங்குளம், சிஏஏ போராட்டம் மற்றும் கரோனா காலத்தில் ஊரடங்கு ஆணையை மீறியவர்கள் மீதான வழக்குகள் திரும்பப்பெற வேண்டியவையே என அரசின் அறிவிப்பை ராமதாஸ் வரவேற்றுள்ளார்..!! இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை: ‘தமிழ்நாட்டில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டம், கூடங்குளம் அணு உலைக்கு எதிரானப் போராட்டம் ஆகியவற்றில் பங்கேற்றவர்கள் மீதும், கரோனா பாதுகாப்பு விதிகளை மீறியவர்கள் மீதும் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் …
Read More »சட்டப்பேரவைத் தேர்தல்: காங்கிரஸ் கட்சியில் பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் விருப்பமனு..!!
தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் பிப்ரவரி 25 முதல் விருப்ப மனுக்கள் பெறப்படவிருப்பதாக கட்சியின் தமிழகத் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்..!! இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், நடைபெறவுள்ள 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சியினரிடமிருந்து 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வருகிற பிப்ரவரி 25 முதல் மார்ச் 5 ஆம் …
Read More »ஆண்டியப்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் குவியலாக கொட்டப்பட்டுள்ள காலாவதியான மருந்துகள்
ஆண்டியப்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் குவியலாக கொட்டப்பட்டுள்ள காலாவதியான மருந்துகள்..!! திருப்பத்தூர் : ஆண்டியப்பனூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் காலாவதியான மருந்து, மாத்திரைகள் குவியல், குவியலாக கொட்டப்பட்டும், தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக வலைதளத்தில் வீடியோ வைரலானதால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆண்டியப்பனூரில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கப்பட்டது. …
Read More »சென்னை செங்குன்றத்தில் கடத்தப்பட்ட +2 மாணவன் 4 மணிநேரத்தில் மீட்பு..!!
சென்னை செங்குன்றத்தில் கடத்தப்பட்ட +2 மாணவன் 4 மணிநேரத்தில் மீட்பு..!! சென்னை, செங்குன்றத்தில் பட்டப்பகலில் பள்ளி மாணவன் 5பேர் கும்பலால் காரில் கடத்தல். கடத்தல் கும்பலில் ஒருவனை பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்ததில் குடும்ப தகராறு காரணமாக மாணவனை கடத்தியதாக பிடிபட்ட நபர் போலீசில் ஒப்புதல். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் புதுநகர் பகுதியை சேர்ந்த காய்கறி வியாபாரியான மாரியப்பன் என்பவரது மகன் கணேசன் அங்குள்ள தனியார் பள்ளியில் +2 படித்து …
Read More »வேலூர் ரேஷன் கடைகளில் சோப்பு வாங்கினால்தான் அரிசி, பருப்பு-ஊழியர்கள் கட்டாயத்தால் மக்கள் வேதனை
வேலூர் ரேஷன் கடைகளில் சோப்பு வாங்கினால்தான் அரிசி, பருப்பு-ஊழியர்கள் கட்டாயத்தால் மக்கள் வேதனை..!! வேலூர் : வேலூர் ரேஷன் கடைகளில் குளியல் சோப்பு வாங்கினால்தான் அரிசி, பருப்பு வழங்குவோம் என்று கட்டாயப்படுத்தும் ரேஷன் கடை ஊழியர்களால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர்.ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசியுடன், பருப்பு, பாமாயில், சர்க்கரை, மண்ணெண்ணை, கோதுமை என அத்தியாவசிய பொருட்கள் வினியோகிக்கப்படுகின்றன. அவ்வப்போது கடுகு, சலவை சோப்பு, வெந்தயம், தேயிலைத்தூள் என சில பொருட்களை வாங்கினால்தான் …
Read More »குடியாத்தம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 32வது சாலை பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு கூட்டம்..!!
குடியாத்தம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 32வது சாலை பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு கூட்டம்..!! தமிழகம் முழுவதும் 32வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம் நேற்று 18.01.2021. முதல் வரும் 17.02.2021 வரை கடைபிடிக்கப்படுகிறது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்று 19.02.2021 காலை 11.00.மணிக்கு புதிதாக வாகன ஓட்டுனர் உரிமம் பெருவதற்காக அலுவலகத்திற்கு வந்திருந்த வாகன ஓட்டிகள் அனைவருக்ககும் குடியாத்தம் வட்டார போக்குவரத்து வாகன ஆய்வாளர் …
Read More »கல்வான் பள்ளத்தாக்கு மோதல் : 5 சீன வீரர்கள் உயிரிழந்ததாக சீனா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Galwan clash China : கடந்த ஆண்டு இந்திய-சீன எல்லைப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 5 சீன வீரர்கள் உயிரிழந்துள்ளதாக சீன அரசின் அதிகாரப்பூர்வ ஊடகம் தெரிவித்துள்ளது…!! இந்தியா-சீனா இடையே எல்லைப் பிரச்சனை தீவிரமடைந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 15ம் தேதி இரு நாடுகளின் படைகளும் கல்வான் பள்ளத்தாக்கில் கடுமையாக மோதிக்கொண்டன. இதில், இந்தியா தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் அறிவித்தது. அதே …
Read More »தமிழகம், புதுவையில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!
தமிழகம், புதுவையில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!! சென்னை: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வளி மண்டல மேலடுக்கில் மேற்கு திசையில் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் லேசானது …
Read More »நாசாவின் ‘பெர்சவரன்ஸ்’ ரோவர் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்த இந்திய பெண் விஞ்ஞானி..!!
இந்தியாவில் பிறந்த பெண் விஞ்ஞானி சுவாதி மோகன் நாசாவின் ‘பெர்சவரன்ஸ்’ ரோவர் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளார்..!! வாஷிங்டன், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியுள்ளது. இந்த விண்கலமானது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்யவும், அங்கிருந்து மண் மற்றும் கற்களை பூமிக்கு திரும்பி எடுத்துவரவும் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 30-ந்தேதி நாசா …
Read More »