Breaking News
Home / 2021 / February / 04

Daily Archives: February 4, 2021

ஏழு பேர் விடுதலையில் தாமதம் ஏன்? பேரவையில் முதல்-அமைச்சர் பழனிசாமி விளக்கம்

சட்டப்பேரவையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்து முதல்-அமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்..!! சென்னை,  சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்து முதல்-அமைச்சர் பழனிசாமி பேசியதாவது:- ஏழு பேர் விடுதலை விஷயத்தில் உண்மைக்கு மாறான தகவல்களை திமுக பரப்பி வருகிறது. 2018 ஆம் ஆண்டு 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பேரறிவாளன் …

Read More »

சசிகலா காரில் அதிமுக கொடி – அமைச்சர்கள் டிஜிபியிடம் புகார்

சசிகலா காரில் அதிமுக கொடி பயன்படுத்தியதால் அதிமுக அமைச்சர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்..!! சசிகலா காரில் அதிமுக கொடி : பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனாவிற்கான சிகிச்சையை சசிகலா பெற்று வந்த நிலையில் கடந்த 31-ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.மருத்துவமனையில் இருந்து புறப்படும் போது சசிகலாவுக்கு சொந்தமான காரின் முகப்பில் அதிமுக கொடி பொருத்தப்பட்டு இருந்தது.இது அரசியலில் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. தினகரன் கருத்து : இதுகுறித்து …

Read More »

செயற்கைகோள் விண்ணில் ஏவும் திட்டத்துக்கு தேர்வு பெற்ற ஆண்டிமடம் மாணவி

ராமேசுவரத்தில் வருகிற 7-ந்தேதி நடைபெறும் செயற்கைகோள் விண்ணில் ஏவும் திட்டத்துக்கு தேர்வு பெற்ற ஆண்டிமடம் மாணவி மோனிஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார்..!! ஆண்டிமடம், பிப்.4- முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் நினைவுதினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் வருகிற 7-ந் தேதி அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை சார்பில் 100 சிறிய செயற்கை கோள்கள், ராணுவ அமைச்சகத்தின் அனுமதியோடு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நல்லோர் வட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு …

Read More »

இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு 8ம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம் அண்ணா பல்கலை அறிவிப்பு

இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு 8ம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம் அண்ணா பல்கலை அறிவிப்பு..!!    சென்னை: கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகள் செயல்படவில்லை. நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டதை தொடர்ந்து  இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் உயர்கல்வி நிறுவனங்கள் செயல்படலாம் என கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் செயல்பட்டுவரும் …

Read More »

அதிர்ச்சி ! வீட்டு உபயோக சிலிண்டர் விலை திடீர் உயர்வு !!

அதிர்ச்சி ! வீட்டு உபயோக சிலிண்டர் விலை திடீர் உயர்வு !! பொது மக்களின் வீட்டு சமையல் பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை தற்போது 25 ரூபாய் அதிகரிக்கப்பட்டு, 753 ரூபாயிக்கு விற்பனை செய்யப்படுகிறது. உலக அளவில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப பொதுத்துறை நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணம் செய்து வருகிறது. அதபோல, வீடு மற்றும் வணிகம் நோக்கம் கொண்ட சிலிண்டர் விலையையும் …

Read More »

“திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்..!” – டிடிவி

தேர்தலில் திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்..!! சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சசிகலா கொரோனா தொற்று காரணமாக விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன்பின் கொரோனாவில் இருந்து குணமடைந்ததையடுத்து மருத்துவர்கள் அறிவுரைப்படி பெங்களூருவிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். அவர் வரும் 7ம் தேதி சென்னை திரும்புவார் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், …

Read More »

புதுக்கோட்டையில் விவசாயிகள் சாலை மறியல்

புதுக்கோட்டையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்…!! புதுக்கோட்டை,   புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் விளைவிக்கும்  காய்கறிகளை நேரடியாக உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு சார்பில் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் உழவர் சந்தைக்கு வெளியே சிலர் இடங்களை ஆக்கிரமித்து தரைக் கடைகளையும், தள்ளுவண்டியில் கடைகளையும் அமைத்து இருப்பதால் உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் தங்களுடைய வாகனங்களை நிறுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். …

Read More »

சசிகலாவை ஹெலிகாப்டரில் பூ தூவி வரவேற்க திட்டம்: ஆட்சியரிடம் குடியாத்தம் முன்னாள் எம்எல்ஏ கோரிக்கை

சசிகலாவை ஹெலிகாப்டரில் பூ தூவி வரவேற்க திட்டம்: ஆட்சியரிடம் குடியாத்தம் முன்னாள் எம்எல்ஏ கோரிக்கை..!!  வேலூர்: சசிகலாவை வரவேற்பதற்கு ஹெலிகாப்டரில் பூ தூவிட அனுமதி அளிக்கக்கோரி குடியாத்தம் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயந்திபத்மநாபன் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜெயந்திபத்மநாபன். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியில் ஏற்பட்ட குழப்பத்தின் போது …

Read More »

மறைந்த அனைத்து முதல்வர்களின் வீடுகளையும் நினைவு இல்லமாக மாற்ற முடியாது.!

மறைந்த அனைத்து முதல்வர்களின் வீடுகளையும் நினைவு இல்லமாக மாற்ற முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது..!! மறைந்த முன்னாள் ஜெயலலிதா இல்லமான வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இன்னும் எவ்வளவு காலத்துக்கு இதுபோல நினைவு இல்லங்கள் அமைக்கப் போகிறீர்கள்? என்று கேள்வியும் எழுப்பியுள்ளது. மேலும் மறைந்த அனைத்து முதல்வர்களின் வீடுகளையும் நினைவு இல்லமாக மாற்ற முடியாது …

Read More »

கோவையில் அரசு ஊழியர்கள் 2 வது நாளாக முற்றுகை கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் அரசு ஊழியர்கள் 2 வது நாளாக முற்றுகை கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்..!! கோவை:-  காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று 2-வது நாளாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பால்ராஜ், …

Read More »
MyHoster