Breaking News
Home / ஆன்மீகம்

ஆன்மீகம்

ஆன்மீகம்

திருவண்ணாமலையில் சத்குரு தவபலேஸ்வரர் குருபூஜை விழா

கடந்த 20.12.21 திங்கட்கிழமை திருவண்ணாமலையில் ‘கரூர் ஸ்ரீ நந்தீஸ்வரர் ஞானபீடம்’ நடத்திய சத்குரு சுவாமி ஸ்ரீலஸ்ரீ தவபாலேஸ்வரர் குரு பூஜை நடைபெற்றது. இந்த ஆன்மீக நிகழ்வில் திருவண்ணாமலை மகான் இடைக்காடர் குறித்து ஆன்மீகப் பேச்சாளர் சிவராமன் உரையாற்றினார்.இவ்விழாவை நவநாத சித்தபெருமான்களின் ஞான வழித்தோன்றலும், சத்குரு தவபாலேஸ்வரர் சுவாமிகளின் சீடருமான சுவாமி சித்தகுருஜி முன்னின்று நடத்தினார். சுவாமி சித்தகுருஜி ‘குருவின் மகிமை’ என்ற தலைப்பில் சத்சங்கம் நடத்தி குருபூஜை விழாவினைத் தொடங்கி வைத்தார். …

Read More »

இலவச யாத்திரை திட்ட பட்டியலில் வேளாங்கண்ணி: கெஜ்ரிவால் அறிவிப்பு

புதுடில்லி: ‘முக்யமந்திரி தீர்த்த யாத்ரா யோஜனா’ என்கிற இலவச யாத்திரை திட்டத்தில் வேளாங்கண்ணி தேவாலயத்தையும் சேர்க்கப்பட்டுள்ளது என்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ‘முக்யமந்திரி தீர்த்த யாத்ரா யோஜனா’ என்கிற இலவச யாத்திரை திட்டத்தை அறிவித்தார். இத்திட்டம் கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி அன்று டில்லி அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது. மூத்த குடிமக்களுக்கான இந்த இலவச யாத்திரை திட்டத்தின் மூலம் 35 …

Read More »

இன்று சத்ய சாய்பாபா பிறந்த நாள் விழா: புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் கோலாகலம்

புட்டபர்த்தி: சத்ய சாய்பாபாவின் 96 வது பிறந்த நாள் விழா புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரசாந்தி நிலையத்தின் பஜனை குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் துவங்கியது. தொடர்ந்து ஆண்டறிக்கை வெளியிடப்பட்டது. சத்ய சாய் டிரஸ்ட் மற்றும் அறக்கட்டளையின் மூத்த நிர்வாகிகள் உரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள், சத்யசாய்பாபா மீதான அன்பை வெளிப்படுத்தவும், அவரிடம் ஆசி பெறவும் சாய் சன்னதியில் ஒன்று …

Read More »

கோவிலுக்கு பாதிப்பு ஏற்படாமல் திட்டமிடுங்கள்; மெட்ரோ ரயில், நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை

சென்னை: பழமை வாய்ந்த பரங்கிமலை காசி விஸ்நாதர் கோவிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பக்தர்கள், ஆன்மிக நல விரும்பிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை, பரங்கிமலையில் காசி விசாலாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. பல நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் புராணப் பெருமை பெற்றது. இக்கோவிலில் மூலவர் காசி விஸ்வநாதர் கிழக்கு முகமாகவும், அவரின் இடபாகத்தில் விசாலாட்சி நின்ற …

Read More »

திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை: கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில் மலை உச்சியில், அரோகரா கோஷம் முழங்க மகா தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. இதற்காக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, நவ.,10ம் தேதி தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நாளான இன்று (நவ.,19) அதிகாலை, 2:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, விநாயகர், முருகர், அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், …

Read More »

சபரிமலை தீர்த்தத்தை அவமதித்த அமைச்சர்; புதிய சர்ச்சையில் பினராயி அரசு

சபரிமலை : சபரிமலை தீர்த்தத்தை அவமதித்த கேரள அமைச்சர் ராதாகிருஷ்ணன், தனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை என கூறியதால் பக்தர்கள் ஆவேசம் அடைந்துள்ளனர். கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் கார்த்திகை ஒன்றாம் தேதியான நவ., 16ம் தேதி அதிகாலை நடை திறந்தபோது கேரள தேவசம்போர்டு அமைச்சரும், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான ராதாகிருஷ்ணன் சன்னிதானத்தில் இருந்தார். மேல்சாந்தி அபிஷேகம் நடத்திய பின் தீர்த்தம் எடுத்து வந்து அமைச்சர், தேவசம்போர்டு …

Read More »

முஸ்லிம்கள் தொழுகைக்கு இடம் வழங்கிய ஹிந்து, சீக்கிய மக்கள்!

குருகிராம்: வக்பு வாரியத்தின் கீழ் பயன்படுத்தாமல் உள்ள 19 பள்ளிவாசல்களை தொழுகை நடத்த திறக்குமாறு முஸ்லிம் பிரதிநிதிகள் கோரியிருந்தனர். அதில் 8 இடங்களில் உள்ளூர் குடியிருப்போர் சங்கங்களில் எதிர்ப்பால் மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது. இந்நிலையில் குருத்வாரா சங்கம் மற்றும் ஒரு ஹிந்து தொழிலதிபர் தங்கள் இடங்களை அவர்கள் தொழுகைக்கு திறந்துவிட்டுள்ளனர். தனது வீட்டின் மாடியில் தொழுகை நடத்த அனுமதித்த தொழிலதிபர் அக்சய் ராவ் கூறியதாவது: முஸ்லிம்கள் திறந்தவெளியில் தொழுகை …

Read More »

திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் 20 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்கலாம்: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் 20 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்க அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 10ல், தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களான, ‘ஏகன், அனேகன்’ என்பதை விளக்கும் வகையில் நாளை அதிகாலை, 4:00 மணிக்கு சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. ‘அனேகன், ஏகன்’ என்பதை விளக்கும் வகையில் மாலை, …

Read More »

சத்ய சாய் பிரசாந்தி மந்திரில் 24 மணி நேர அகண்ட பஜனை நிறைவு

சத்ய சாய்பாபா அவதார புருஷராகவும், ஆன்மிக குருவாகவும் போற்றப்படுகிறவர். இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் தன்னுடைய நிறுவனங்களின் மூலம் எண்ணற்ற இலவசக் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சேவை புரிந்து வந்தார். இவருடைய பெயரில் சுமார் 1,200க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் உலகெங்கிலும் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும், நவம்பர் 23 அன்று இவரது அவதார நாள் உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. 2013-ம் ஆண்டில் இருந்து நவம்பர் மாதம் …

Read More »

கன்னியாகுமரிக்கு ரெட் அலர்ட்: ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: கன்னியாகுமரியில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி கீதா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வட உள் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று(நவ.,14) தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். …

Read More »
MyHoster