Breaking News
Home / கல்வி

கல்வி

பட்டப்படிப்பு சான்றிதழ் தாமதம்; மாணவர்கள் தவிப்பு

சென்னை : தமிழக திறந்தநிலை பல்கலையில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு, சான்றிதழ் வழங்க தாமதமாகி உள்ளதால், பட்டதாரிகள் பதவி உயர்வு மற்றும் புதிய பணிகளுக்கு செல்ல முடியாமல் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.     அரசு துறையில் பணியாற்றும் ஊழியர்கள், ஆசிரியர்கள் போன்றவர்கள், தங்களுக்கான பதவி உயர்வு மற்றும் உயர்கல்வி ஊக்க ஊதியம் பெறும் வகையில், தொலைநிலையில் முதுநிலை படிப்புகள் படிக்கின்றனர். அதேபோல், தனியார் துறையில் பணியாற்றுவோரும், தங்களின் கல்வி தகுதியை உயர்த்தி …

Read More »

தமிழகத்தில் கல்லூரிகளில் வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம்

சென்னை: தமிழகத்தில் கல்லூரிகள் மற்றும் பல்கலைகளில் வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பிரச்னையால், ‘ஆன்லைன்’ வழியில் வகுப்புகள் நடத்தப்பட்டன. வீட்டில் இருந்தவாறே படித்த மாணவர்களுக்கு, ஆன்லைன் வழியிலேயே மூன்று செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்நிலையில், அடுத்த மாதம் நடக்க உள்ள செமஸ்டர் தேர்வுகளுக்கு, கல்லூரிகளுக்கு நேரடியாக வந்து மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என, உயர் கல்வித்துறை அறிவித்தது. …

Read More »

வருந்துகிறோம் ஆனால் மறுதேர்வு நடத்த முடியாது: நீட் விஷயத்தில் சுப்ரீம் கோர்ட்!

புதுடில்லி: நீட் தேர்வில் கேள்வி – பதில் தாள் மாற்றித் தரப்பட்டதால் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த இரு மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் மறுதேர்வு நடத்தும் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இந்தாண்டு செப்., 12-ல் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். அதன் முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. ஐதராபாத், டெல்லி, மும்பை …

Read More »

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை பயிற்றுமொழியாக்க இயலாது: மத்திய அரசு

மதுரை: ‛‛தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை பயிற்றுமொழியாக்க இயலாது,” என, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரை சேர்ந்த செல்வகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ‛மத்திய அரசு ஹிந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மீதமுள்ள 20 மொழிகளையும் புறக்கணிக்கும் …

Read More »

19 மாதங்களுக்கு பின் பள்ளிகள் திறப்பு; உற்சாக வரவேற்பு

சென்னை; ஒன்று முதல் எட்டாம்வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ செல்வங்களுக்கு ஆசிரியர்கள், ஆசிரியைகள் மலர் , இனிப்பு வழங்கி வரவேற்றனர். மாணவ செல்வங்கள் உற்சாகமாக காணப்பட்டனர் . தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால், 2020 மார்ச் 10ல் பள்ளிகள் மூடப்பட்டன. அதன்பிறகு, முதல் அலை முடிந்ததும், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள்திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டன. தொற்றின் இரண்டாம் அலை பரவலால், …

Read More »

புதிய கல்வி கொள்கையின்படி ஆசிரியர்களுக்கு பயிற்சி; பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

சென்னை : புதிய கல்விக் கொள்கை அடிப்படையில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை, பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வி ஆணையரகம் சார்பில், இணை இயக்குனர் அமுதவல்லி, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:புதுடில்லியில் உள்ள கலாசார வளம் மற்றும் பயிற்சி நிறுவனத்தால், புதிய கல்விக் கொள்கை- – 2020 அடிப்படையில், கலை மற்றும் கலாசாரம் என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் பயிற்சி …

Read More »

துணைவேந்தர்களுடன் கவர்னர் ரவி ஆலோசனை; புதிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்கிறார்

சென்னை : புதிய கல்வி கொள்கை உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க பல்கலை துணைவேந்தர்களுக்கான ஆலோசனை கூட்டம் நாளை(அக்.,30) கவர்னர் மாளிகையில் நடக்கிறது. இதில் அனைத்து பல்கலை துணைவேந்தர்களும் பங்கேற்க உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழக கவர்னராக பொறுப்பேற்றுள்ள ஆர்.என்.ரவி படிப்படியாக தன் நிர்வாக பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். பதவியேற்ற பின் முதல் கட்டமாக டில்லி சென்று பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை …

Read More »

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை: உச்சநீதிமன்றம்

புதுடில்லி: நீட் தேர்வு முடிவுகளை வெளியிட மும்பை உயர்நீதிமன்றம் விதித்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ளது. இதனால், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை எனத் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 12-ல் இந்தியா முழுவதும் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில் சேர நீட் தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிந்து 45 நாட்களுக்கு மேல் ஆகும் நிலையில், இன்னமும் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையே நீட் தேர்வு ஓ.எம்.ஆர்., தாளில் குளறுபடி உள்ளதாக …

Read More »

8ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தக வினியோகம் தாமதம்; வகுப்புகள் நடத்துவதில் சிக்கல்

சென்னை : எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இரண்டாம் பருவ பாட புத்தகங்களின் வினியோகம் தாமதமாகி உள்ளது. இதனால், வகுப்புகள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, முப்பருவ தேர்வு முறை மற்றும் சமச்சீர் கல்வி திட்டம் அமலில் உள்ளது. முதல் மூன்று மாதங்களுக்கு, முதல் பருவ பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படும்.அதன்பின், செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் இரண்டாம் பருவ புத்தகங்கள் …

Read More »

நீட் விலக்கு மசோதா: கவர்னருடன் முதல்வர் சந்திப்பு

சென்னை: நீட் விலக்கு மசோதா தொடர்பாக கவர்னர் ரவியை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் பேசினார். சட்டசபையில், நீட் தேர்வுக்கு எதிராக கடந்த செப்டம்பர் மாதம் 14ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைய உள்ள நிலையில், இது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று(அக்.,13) மாலை கவர்னர் ரவியை சந்தித்து பேசினார். முதல்வருடன் தலைமை செயலர் இறையன்பு உடன் சென்றார். Share …

Read More »
MyHoster