Breaking News
Home / தமிழகம்

தமிழகம்

திருவண்ணாமலையில் சத்குரு தவபலேஸ்வரர் குருபூஜை விழா

கடந்த 20.12.21 திங்கட்கிழமை திருவண்ணாமலையில் ‘கரூர் ஸ்ரீ நந்தீஸ்வரர் ஞானபீடம்’ நடத்திய சத்குரு சுவாமி ஸ்ரீலஸ்ரீ தவபாலேஸ்வரர் குரு பூஜை நடைபெற்றது. இந்த ஆன்மீக நிகழ்வில் திருவண்ணாமலை மகான் இடைக்காடர் குறித்து ஆன்மீகப் பேச்சாளர் சிவராமன் உரையாற்றினார்.இவ்விழாவை நவநாத சித்தபெருமான்களின் ஞான வழித்தோன்றலும், சத்குரு தவபாலேஸ்வரர் சுவாமிகளின் சீடருமான சுவாமி சித்தகுருஜி முன்னின்று நடத்தினார். சுவாமி சித்தகுருஜி ‘குருவின் மகிமை’ என்ற தலைப்பில் சத்சங்கம் நடத்தி குருபூஜை விழாவினைத் தொடங்கி வைத்தார். …

Read More »

கலவை தாலுகா அலுவலகத்திற்கு நள்ளிரவில் வந்த கலெக்டர்

கலவை தாலுகா அலுவலகத்திற்கு நள்ளிரவில் வந்த கலெக்டர் கலவை ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையால் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஏரி, குளங்கள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. மழை சேதங்களை தடுக்க அமைச்சர் மற்றும்மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கலவை பகுதியில் அதிக அளவு மழை பெய்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் கலெக்டர் பாஸ்கர …

Read More »

சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ : இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

கட்சி எப்படி வளரும்? அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று முன்தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், உட்கட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்கப் படும் என, தகவல் வெளியானது. ஆனால், நீண்ட நேரம் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதிலே நேரம் கடந்துள்ளது. உட்கட்சி தேர்தல் விவாதத்தின்போது, பன்னீர்செல்வம் ஆதரவாளரான கட்சி அமைப்பு செயலர் ஜே.சி.டி.பிரபாகர், கட்சி விதிகளை எடுத்துரைத்து, அதன்படி தேர்தல் நடத்த வேண்டும் …

Read More »

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் என்று எதிர்பார்த்தோம்.10 ஆண்டுகளில் கோவைக்கு தேவையான திட்டங்களை நாங்கள் செய்து உள்ளோம். .மின்சாரத்துறை அமைச்சர் பல்வேறு பகுதிகளில் மக்கள் சபை நடத்தி பொதுமக்களிடம் மனு வாங்கியது ஆரோக்கியமான செயல்.கோவையில் 300க்கும் மேற்பட்ட ஒப்பந்த சாலைகளை திமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி தேர்தலில் ஏதாவது ஒரு வழக்குப் போட்டு …

Read More »

இது உங்கள் இடம்: முதல்வரின் இன்னொரு முகம்!

பா.விஜய், காட்டிகன், சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: ‘தமிழகத்தின் சுவிட்சர்லாந்து’ என்று அழைக்கப்படும் நீலகிரியில், விதிமீறல் கட்டடங்கள் அதிகமாகிப்போனதால், உச்ச நீதிமன்றமே தலையிட்டு சில சட்ட விதிமுறைகளை அறிவித்தது. அதை, மாவட்ட ஆட்சியர் மூலம் நிறைவேற்றவும் ஆணையிட்டது. நீலகிரியின், 113வது கலெக்டராக, 2017ல் இன்னசென்ட் திவ்யா நியமிக்கப்பட்டார். பொறுப்பேற்ற நாளிலிருந்தே, தன் பணியை சிறப்பாக மேற்கொண்டார். சட்டத்திற்குப் புறம்பாக ஆழ்துளைக் கிணறு தோண்டுதல், மரம் கடத்தல் …

Read More »

தண்ணீரில் ததும்புது தமிழகம்: இயல்பைவிட 70% கூடுதல் மழைப்பொழிவு

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 70 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கை: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய …

Read More »

திருநெல்வேலியில் விடிய விடிய கனமழை; குடியிருப்பை சூழ்ந்த வெள்ளம்; வீடு சுவர் இடிந்து குழந்தை பலி

திருநெல்வேலி: திருநெல்வேலியில் விடிய விடிய பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிப்படைந்தது. களக்காடு அருகே கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து 3 வயது பெண் குழந்தை பலியானது. திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பாபநாசம், சேர்வலாறு மற்றும் கடனா அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தாமிரபரணி ஆற்றில் 8 ஆயிரம் …

Read More »

திருப்பூரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலம் ஆக்கிரமிப்பு: மீட்க அறநிலையத்துறை முயற்சி

பொங்கலுார்: திருப்பூரில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலத்தை ஆக்கிரமித்து, வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்ய முயற்சி நடக்கிறது. திருப்பூர், காங்கயம் ரோடு, நாச்சிபாளையத்தில், ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலம் உள்ளது. சர்வே எண்:105ல் 2.47 ஏக்கர் உள்ளது. இந்த இடம் இனாம் ஒழிப்பு சட்டத்தின் கீழ் தனியாருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.அதனை வைத்து, அவர் பத்திரம் தயார் செய்து விற்று விட்டார். தற்போது …

Read More »

வடிகால் வசதியின்றி மூழ்கிய பயிர்கள்: இனியாவது விழிக்குமா அரசு நிர்வாகம்?

தஞ்சாவூர்: வடிகால் வசதி ஏற்படுத்தும் பணியில் பொதுப்பணித் துறையினர் அலட்சியம் காட்டியதே, டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்கள் மழை நீரில் மிதக்க முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் மேட்டூர் அணை பாசனத்தையும், வடகிழக்கு பருவ மழையையும் நம்பி, 3.50 லட்சம் ஏக்கரில் குறுவை; 10 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடக்கிறது.அக்டோபர் 26ம் தேதி முதல் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால், …

Read More »

குற்றவாளிகளை சுட போலீசார் தயங்குவது ஏன்? உண்மையை உடைக்கிறார் முன்னாள் டி.ஜி.பி., ஜாங்கிட்

மதுரை: திருச்சியில் ரோந்து சென்ற எஸ்.எஸ்.ஐ., பூமிநாதன் ஆடு திருடர்களை பிடிக்க முயன்றபோது வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதைதொடர்ந்து போலீசார் ரோந்து செல்லும்போது துப்பாக்கியுடன் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளதாக டி.ஜி.பி., சைலேந்திர பாபு தெரிவித்தார். ஆனாலும் ரோந்து போலீசார் பலர் துப்பாக்கியுடன் செல்ல தயக்கம் காட்டுகின்றனர். ஏன் தயங்குகின்றனர் என ஓய்வுபெற்ற டி.ஜி.பி., ஜாங்கிட் கூறியதாவது: போலீசார் ரோந்து செல்லும்போதும், வாரன்ட் கொடுக்க செல்லும்போதும், ஒரு கும்பல் தகராறில் ஈடுபடுவதை தடுக்க செல்லும்போதும் …

Read More »
MyHoster