Thursday , February 25 2021
Breaking News
Home / தென் மாவட்டங்கள் / கன்னியாகுமரி

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

அரை அதிமுக – அரை பாஜக ஆட்சிதான் பழனிசாமி தலைமையிலான ஆட்சி: கன்னியாகுமரியில் ஸ்டாலின் பிரச்சாரம்

அரை அதிமுக – அரை பாஜக ஆட்சிதான் பழனிசாமி தலைமையிலான ஆட்சி: கன்னியாகுமரியில் ஸ்டாலின் பிரச்சாரம்..!! நீட் தேர்வு முதல் ஏழு பேர் விடுதலை விவகாரம் வரை எல்லாவற்றையுமே அரைகுறையாகச் செய்யும் அரை அதிமுக – அரை பாஜக ஆட்சிதான் பழனிசாமி தலைமையிலான இன்றைய ஆட்சி என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (பிப். 6) காலை, கன்னியாகுமரி மாவட்டம், …

Read More »

எய்ட்ஸ் நோயாளி என்று தெரிந்தே பரிதாபப்பட்டு காதலித்தேன் ஆட்டோ டிரைவருடன் ஓடிய சிறுமி அளித்த அதிர்ச்சி வாக்கு மூலம்

எய்ட்ஸ் நோயாளி என்று தெரிந்தே பரிதாபப்பட்டு ஆட்டோ டிரைவரை காதலித்ததாக சிறுமி அளித்த வாக்குமூலத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது..!! நாகர்கோவில்:  எய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவியை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். குமரியில் நடந்த இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கல்லூரி மாணவி குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் …

Read More »

திமுக எம்பி கனிமொழியை விரட்டியடித்த பொது மக்கள்..!!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தங்கையும், திமுக எம்பியுமான கனிமொழியை கன்னியாகுமரி மாவட்ட தோவாளை மலர்சந்தை வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் விரட்டியடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்றது தோவாளை மலர்சந்தை. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகாவிலிருந்தும் தோவாளை மலர் சந்தைக்கு மலர்கள் வருவது வழக்கம். இந்த சந்தையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் மலர்கள் விநியோகம் …

Read More »

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குமரிக்கு இன்று வருகை; அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்

இன்று குமரிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிறார். அவர் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்று உரையாற்றுகிறார். நாகர்கோவில், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) குமரி மாவட்டம் வருகிறார். இதற்காக அவர் இன்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வருகிறார். அங்கிருந்து பிற்பகல் 3 மணி அளவில் கார் மூலம் புறப்பட்டு குமரிக்கு வரும் அவருக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமையில் அ.தி.மு.க. சார்பில் …

Read More »

எம்ஜிஆரின் அடுத்த வாரிசு நான்தான்- ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்

எம்ஜிஆரின் அடுத்த வாரிசு நான்தான். நிரந்தரம் என்பது எதிலும் இல்லை, யாரும் கிடையாது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பரப்புரையில் பேச்சு..! சீரமைப்போம் தமிழகத்தை என்ற பெயரில் 4வது நாளாக தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நெல்லை கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். அப்போது நாகர்கோவிலில் பேசிய கமல்ஹாசன், எம்ஜிஆரின் அடுத்த வாரிசு நான்தான். நிரந்தரம் …

Read More »

குமரி: தொடரும் லஞ்ச வேட்டை… சர்ச்சையில் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகம்!

குமரி: தொடரும் லஞ்ச வேட்டை… சர்ச்சையில் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகம்! லஞ்சப் பணத்தில் பெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுக்களாகவே இருந்தன. இதைத் தொடர்ந்து அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் ஆய்வாளர் பெருமாள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. மார்த்தாண்டம் வட்டார …

Read More »

அப்பா பாணியில் அரசியல்: விஜய் வசந்த்துக்குக் குமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா?

அப்பா பாணியில் அரசியல்: விஜய் வசந்த்துக்குக் குமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா? கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வசந்தகுமார் அண்மையில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காலியாக அறிவிக்கப்பட்ட இந்தத் தொகுதிக்கு, வரும் பிப்ரவரிக்குள் தேர்தல் நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சீட் பெறக் கடும் போட்டி நிலவுகிறது. வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் தன் தந்தையின் பாணியில் அரசியல் பயணங்களை முன்னெடுத்து …

Read More »

`பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை… புகார் அளித்ததால் ட்ரான்ஸ்பர்?!’ – குமரி சர்ச்சை

`பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை… புகார் அளித்ததால் ட்ரான்ஸ்பர்?!’ – குமரி சர்ச்சை `பிப்ரவரில இருந்தே எனக்கு ஹராஸ்மெண்ட் நடந்துகிட்டிருக்கு. இதுபற்றி புகார் அளித்ததுனால என்ன எப்பிடி தாக்கலாம்னு முயற்சி பண்ணிகிட்டிருக்காங்க. அதுல ஒரு முயற்சியாத்தான் என்ன பரமக்குடிக்கு ட்ரான்ஸ்பர் செய்திருக்கிறாங்க’ என்கிறார் பெண் மருத்துவர் பெமிலா. கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் பெமிலா. இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக முட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் …

Read More »

தூத்துக்குடி,கன்னியாகுமரி,விருதுநகர் மாவட்டங்களுக்கு முதலமைச்சர் சுற்றுப்பயணம் ..

3 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். சென்னை: கொரானா வைரஸ் பாதிப்பு தொடர்பாகவும் மாவட்ட வளர்ச்சி பணிகள் தொடர்பாகவும் ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி வருகிற 13-ந்தேதி முதல் 3 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். வரும் 13ஆம் தேதி முதலாவதாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு செல்ல உள்ள முதலமைச்சர், 14ஆம் தேதி கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டத்திற்கு …

Read More »

கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட உடல்! – மருத்துவக் கல்லூரி மாணவர்?

மருத்துவக் கல்லூரி மாணவர் சிவனேஷை, அவரது தந்தை தேடிச் சென்றபோதுதான் கிணற்றில் அவரது உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள முகிலன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சீனிவாசன். இவரது மூன்றாவது மகன் சிவனேஷ் (22). இவர், மதுரையில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயின்று வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டதால், சிவனேஷ் தனது வீட்டிற்கு வந்து, …

Read More »
MyHoster