Breaking News
Home / தென் மாவட்டங்கள் / திண்டுக்கல்

திண்டுக்கல்

திண்டுக்கல்

மு.க.ஸ்டாலின் நாளை முதல்வராக வரப் போகிறார்: மேடையில் வாய் தவறி பேசிய அதிமுக எம்எல்ஏ

மு.க.ஸ்டாலின் நாளை முதல்வராக வரப் போகிறார்: என மேடையில் வேடசந்தூர் அதிமுக எம்எல்ஏ வாய் தவறி பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது..!! திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல்லில் நடைபெற்றது. முன்னாள் எம்.எல்.ஏ பழனிச்சாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் வேடசந்தூர் எம்.எல்.ஏ. பரமசிவம் பேசியதாவது: சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்கும். முதல்வர் பழனிசாமி …

Read More »

பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது..!! திண்டுக்கல்:  தமிழ்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன்கோவில் தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த ஆன்மிக தலங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, கந்தசஷ்டி உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த திருவிழா காலங்களில் தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான …

Read More »

நிர்வாணமாக கட்டி வைத்து தனியார் பள்ளி ஊழியர் குத்திக்கொலை !!

திண்டுக்கல்லில், நிர்வாணமாக கட்டி வைத்து தனியார் பள்ளி ஊழியர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். திண்டுக்கல், திண்டுக்கல் கிழக்கு கோவிந்தாபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 48). இவர், திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஊழியராக வேலை பார்த்தார். கடந்த 4-ந்தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்ற மணிகண்டன் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய உறவினர்கள், மணிகண்டனை பல்வேறு இடங்களில் தேடினர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை. …

Read More »

கார்களின் கண்ணாடிகள் உடைப்பு ; திண்டுக்கல்லில் பரபரப்பு..

திண்டுக்கல்லில், சாலையோரத்தில் நிறுத்தியிருந்த 8 கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல், திண்டுக்கல் ராமர் காலனியில் இருந்து மாசிலாமணிபுரம் செல்லும் சாலையோரத்தில், அப்பகுதியில் வசிக்கிற மக்கள் தங்களது கார்களை இரவு நேரத்தில் நிறுத்துவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினமும் சாலையோரத்தில் கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்தநிலையில் நள்ளிரவில் 12.30 மணியளவில், 2 மோட்டார் சைக்கிள்களில் 5 பேர் வந்தனர். இவர்கள், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒவ்வொரு கார்களாக கற்களை வீசி கண்ணாடிகளை …

Read More »

பைனான்ஸ் அதிபர் வெட்டி படுகொலை !!

திண்டுக்கல் அருகே பைனான்ஸ் அதிபரை வெட்டி படுகொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல்: திண்டுக்கல் – நத்தம் சாலை ராதாராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது 34). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சரண்யா என்ற மனைவியும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். திண்டுக்கல்: திண்டுக்கல் – நத்தம் சாலை ராதாராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது …

Read More »

திண்டுக்கல் அருகே ரெயில் தண்டவாளத்தில் உருண்டு விழுந்த ராட்சத பாறாங்கல் !!

திண்டுக்கல் அருகே ரெயில் தண்டவாளத்தில் ராட்சத பாறாங்கல் உருண்டு விழுந்தது. இதனை என்ஜின் டிரைவர் கவனித்து நிறுத்தியதால் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் சிக்காமல் தப்பியது. சின்னாளபட்டி, திண்டுக்கல்-மதுரை இடையே இருவழி ரெயில் பாதை உள்ளது. திண்டுக்கல்லில் இருந்து மதுரை மார்க்கமாக செல்லும் ரெயில்கள் அம்பாத்துரை, கொடைரோடு வழியாக மதுரை செல்கின்றன. ஆனால் மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து திண்டுக்கல் வழியாக திருச்சி, சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் ரெயில்கள் கொடைரோடு, …

Read More »

நிலத் தகராறில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி

பழனியில் நிலம் தகராறு தொடர்பான விவகாரத்தில் தியேட்டர் உரிமையாளர் நடராஜ் சுட்டதில் காயம் அடைந்த இருவரில் ஒருவரான சுப்பிரமணி உயிரிழந்தார். துப்பாக்கி தோட்டா காயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டம், பழனி ராமபட்டினம் புதூரில் வள்ளுவர் என்ற திரையரங்கு இயங்கி வருகிறது. இந்தத் திரையரங்கின் உரிமையாளர் நடராஜ். இவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் சுப்பிரமணி, பழனிச்சாமி ஆகியோரும் …

Read More »

லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி !!

வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.46 ஆயிரம் சிக்கியது. இதுதொடர்பாக தாசில்தார் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் அதிகாரிகள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலரிடம் அன்பளிப்பு பெறுவதாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை …

Read More »

திண்டுக்கல்லில் ஒரே ஒரு தியேட்டர் திறப்பு !! – ரசிகர்களிடம் ஆர்வமில்லை..

புதிய சினிமாக்கள் வெளியாகாததால் ரசிகர்களிடம் ஆர்வமில்லாத நிலையில், உரிமையாளர்களும் முன்வராததால் திண்டுக்கல்லில் ஒரே ஒரு தியேட்டர் மட்டும் திறக்கப்பட்டது. திண்டுக்கல், தமிழகத்தில் கொரோனா பரவலால் கடந்த 7 மாதங்களாக சினிமா தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. புதிய சினிமாக்களும் வெளியாகாமல் முடங்கின. இதனால் தியேட்டர்களுக்கு சென்று சினிமாவை பார்த்து ரசித்தவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இதற்கிடையே கொரோனா தாக்கம் குறைந்தது. இதனால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, நேற்று முதல் தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து …

Read More »

திண்டுக்கல்லில் தீபாவளி திருடர்களை கண்டறிய கண்காணிப்பு கோபுரம் !!

திண்டுக்கல்லில் தீபாவளி கூட்ட நெரிசலில் உலாவும் திருடர்களை கண்டறிய 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல், தீபாவளி பண்டிகை வருகிற 14-ந்தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. எனவே, புத்தாடைகள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவற்றை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். மேலும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், கடைக்காரர்களும் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளனர். இதையொட்டி திண்டுக்கல்லில் ஜவுளிக்கடைகள், வீட்டு உபயோக பொருட்கள், மின்சாதன பொருட்கள் கடைகளுக்கு மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். …

Read More »
MyHoster