Breaking News
Home / தென் மாவட்டங்கள்

தென் மாவட்டங்கள்

தென் மாவட்டங்கள்

திருநெல்வேலியில் விடிய விடிய கனமழை; குடியிருப்பை சூழ்ந்த வெள்ளம்; வீடு சுவர் இடிந்து குழந்தை பலி

திருநெல்வேலி: திருநெல்வேலியில் விடிய விடிய பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிப்படைந்தது. களக்காடு அருகே கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து 3 வயது பெண் குழந்தை பலியானது. திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பாபநாசம், சேர்வலாறு மற்றும் கடனா அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தாமிரபரணி ஆற்றில் 8 ஆயிரம் …

Read More »

ஏன் ஹிந்தி மொழியை கற்க கூடாது?: உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: ஏன் ஹிந்தி மொழியை கற்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘மத்திய அரசு தனது திட்டங்களை செயல்படுத்தும் போது ஹிந்தியில் தான் பெயர் வைக்கிறார்கள். அந்த திட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்தும் போது தமிழக அரசின் அரசாணை, விளம்பரங்கள் மற்றும் செய்தி குறிப்புகளில் மேற்படி ஹிந்தி வார்த்தைகளில் உள்ள …

Read More »

நெல்லையில் கொட்டிதீர்த்தது மழை: மின்னல் தாக்கி ஒருவர் பலி: 7 பேர் காயம்

திருநெல்வேலி:திருநெல்வேலி மாநகர பகுதியில் பெய்த மழையினால் புதிய பஸ் ஸ்டாண்ட் உள்பட பல இடங்கள் நீரில் மிதந்தன.மின்னல் தாக்கியதில் ஒருவர் பலியானார். 7 பேர் காயமுற்றனர்.     திருநெல்வேலி மற்றும் நாங்குநேரி, ராதாபுரம், பணகுடி, துாத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லுார் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மாலை 4:30 மணிக்கு துவங்கிய பலத்த மழை இரவிலும் நீடித்தது. இதனால் பெருமாள்புரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிர்புறம் செயல்படும் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் நீரில் …

Read More »

புதிய மாநகராட்சிகளில் மட்டுமே வார்டு மறுவரையறை: தாறுமாறான வார்டு பிரிப்பால் ஆளுங்கட்சியினர் அச்சம்

பழைய மாநகராட்சிகளில் வார்டு மறுவரையறைக்கு வாய்ப்பில்லை என்பது உறுதியாகி இருப்பதால், அந்த மாநகராட்சிகளில் வெற்றி பெற முடியுமா என்ற அச்சம், ஆளுங்கட்சியினருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், கடந்த பத்தாண்டுகளுக்கு முன், மாநகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டது. சென்னை மாநகராட்சி பெருநகரமாக மாற்றப்பட்டு, 155 வார்டுகள், 200 வார்டுகளாக்கப்பட்டன. கோவை மற்றும் மதுரை மாநகராட்சிகளில் இருந்த, 72 வார்டுகள், 100 வார்டுகளாக அதிகரிக்கப்பட்டன. அதன்படி, 2011ல் உள்ளாட்சித் தேர்தல் …

Read More »

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை பயிற்றுமொழியாக்க இயலாது: மத்திய அரசு

மதுரை: ‛‛தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை பயிற்றுமொழியாக்க இயலாது,” என, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரை சேர்ந்த செல்வகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ‛மத்திய அரசு ஹிந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மீதமுள்ள 20 மொழிகளையும் புறக்கணிக்கும் …

Read More »

தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜை விழா கடந்த அக்,.28ம் தேதி துவங்கி இன்று 3-ம் தேதியுடன் நிறைவடைகிறது. நேற்று முன்தினம் யாகசாலை பூஜை மற்றும் லட்சார்ச்சனையுடன் ஆன்மிக விழா தொடங்கியது. இரண்டாவது நாளாக அரசியல் விழா நடைபெற்றது. பசும்பொன்னில் இன்று (அக்., 30ம் தேதி) …

Read More »

ம.தி.மு.க., பதவி முள்கிரீடம் : வைகோ மகன் துரை பேட்டி

திருநெல்வேலி : ”அரசியல் வாழ்க்கை நச்சு நிறைந்தது. இந்த பதவி ஒரு முள்கிரீடம்,” என, வைகோவின் மகன் துரை தெரிவித்தார். ம.தி.மு.க., தலைமை நிலைய செயலராக நியமிக்கப்பட்டுள்ள வைகோ மகன் துரை, நேற்று தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கூறியதாவது:கல்லுாரி மேடைகளில் கூட நான் பேசியதில்லை. ஒரு அரசியல்வாதிக்கு உரிய திறமைகள் எதுவும் என்னிடம் இல்லை. நான் கடவுள் பக்தி கொண்டவன். நான் தொழில், வணிகம் செய்து வந்தேன். 45 வயதுக்கு …

Read More »

18 ஆண்டுகளில் 24 விசாரணை ஆணையங்கள்.. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு கமிஷனுக்கு ரூ4.23 கோடி செலவு!

சென்னை: தமிழகத்தில் கடந்த 18 ஆண்டுகளில் மொத்தம் 24 விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன; தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு ரூ4.23 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. திருநெல்வேலியை சேர்ந்த சமூக ஆர்வலர் அ.பிரம்மா, கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை தமிழக அரசால் அமைக்கப்பட்ட …

Read More »

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்காலிக புறநோயாளிகள் பிரிவு செயல்படுத்த திட்டம்

மதுரை,-”மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்காலிக புறநோயாளிகள் பிரிவை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது,” என, மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார். மதுரை அரசு மருத்துவமனையில் 400 கோடி ரூபாயில் நடக்கும் கட்டுமான பணிகளை நேற்று ஆய்வு செய்தார்.பின் அவர் கூறியதாவது: ஜிகா திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 25 ஆயிரம் சதுர அடி பரப்பிலான மருத்துவமனை கட்டுமானம் அடுத்தாண்டு அக்டோபரில் முடியும். தமிழகத்தில் 3 பேர் டெங்கு காய்ச்சலுக்கு …

Read More »

விவசாயத்தை மாற்ற வேண்டும்: நிதின் கட்கரி பேச்சு

மதுரை: “நாட்டில் பல்வேறு பயன்கள் தரும் துறையாக விவசாயத்தை மாற்ற வேண்டும்” என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். சுதேசி விழிப்புணர்வு இயக்கம் மற்றும் இந்திய பல்கலைகள் கூட்டமைப்பு சார்பில் மூன்று நாள் இணையவழி பொருளாதாரக் கருத்தரங்கு துவங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியை கூட்டமைப்பு பொது செயலாளர் பங்கஜ் மெட்டல் துவக்கி வைத்தார். இதில் சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி “நாட்டில் விவசாயத்தை …

Read More »
MyHoster