Breaking News
Home / சேலம்

சேலம்

சேலம்

சேலத்தில் காஸ் சிலிண்டர் வெடித்து 3 வீடுகள் தரைமட்டம்: 5 பேர் பலி

சேலம்: சேலத்தில் சிலிண்டர் வெடித்ததில் 3 வீடுகள் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கியவர்களில் ஐந்து பேர் உயிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேலம் கருங்கல்பட்டி பாண்டுரங்கநாதர் கோவில் தெருவில் இன்று (நவ.,23) காலை 6.30 மணிக்கு சிலிண்டர் வெடித்ததில் 3 வீடுகள் இடிந்து விழுந்தது. இதில் சிக்கிய 5 வயது பெண் குழந்தை உள்ளிட்ட 10 நபர்களை மீட்கும் …

Read More »

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: ‛‛சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்,” என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.   இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு திசையில் நகர்ந்து வரும் 18ஆம் …

Read More »

‘மாமூல்’ பட்டியல் வெளியீடு: எஸ்.பி.,க்கு வாழ்த்து போஸ்டர்

சேலம் : போலீசாரின் மாமூல் பட்டியலை வெளியிட்டு எச்சரித்த, சேலம் எஸ்.பி.,யை பாராட்டி பல்வேறு அமைப்புகள், ‘போஸ்டர்’ ஒட்டின. அதை போலீசாரே, இரவோடு இரவாக கிழித்தனர். சேலம் மாவட்ட எஸ்.பி., ஸ்ரீஅபிநவ், போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரியும் எழுத்தர் முதல் இன்ஸ்பெக்டர் வரை வசூலிக்கும், ‘மாமூல்’ பட்டியலை வெளியிட்டு எச்சரித்தார். இது, ‘தினமலர்’ நாளிதழ் மற்றும் பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியாகியது .எஸ்.பி., செயலை பாராட்டி, சேலம் மாநகர் முழுதும், இந்திய …

Read More »

முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு நெருக்கமான நிர்வாகி வீட்டில் ரெய்டு

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதன்படி கடந்த வாரம் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் 600 பவுன் நகை மற்றும் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று (அக்.,22) சேலத்தில் 17 இடங்களிலும், சென்னையில் 3 இடங்களிலும் , திருச்சி, கரூர், தலா ஒரு இடத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தி வருகின்றனர். …

Read More »

ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு தர்மபுரியில் ₹10 ஆயிரம் கோடியில் மெகா ஜவுளி பூங்கா

ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு தர்மபுரியில் ₹10 ஆயிரம் கோடியில் மெகா ஜவுளி பூங்கா *சேலத்தில் கைத்தறி துறை அமைச்சர் காந்தி பேட்டி சேலம் : தர்மபுரியில் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், ₹10 ஆயிரம் கோடியில் மெகா ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, கைத்தறித் துறை அமைச்சர் காந்தி தெரிவித்தார். தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில், சேலத்தில் கைத்தறி நெசவாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. …

Read More »

டிப்ளமோ படித்து மருத்துவமனை நடத்திய போலி டாக்டர் ஊசி போட்டதில் தறித்தொழிலாளி பரிதாப பலி

டிப்ளமோ படித்து மருத்துவமனை நடத்திய போலி டாக்டர் ஊசி போட்டதில் தறித்தொழிலாளி பரிதாப பலி இளம்பிள்ளை: சேலம் அருகே போலி டாக்டர் ஊசி போட்டதில் தறித்தொழிலாளி இறந்தார். இதையடுத்து போலி டாக்டரை போலீசார் கைது ெசய்தனர். சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த இடங்கணசாலை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (30), தறித்தொழிலாளி. கடந்த இரு வாரத்திற்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மணிகண்டன், அங்குள்ள சிவக்குமார்(51) என்ற மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுள்ளார். …

Read More »

50 நாளுக்கு முன் மாயமானவர் திருநங்கையாக திரும்பி வந்தார்: சேலத்தில் தாய் பரிதவிப்பு

50 நாளுக்கு முன் மாயமானவர் திருநங்கையாக திரும்பி வந்தார்: சேலத்தில் தாய் பரிதவிப்பு சேலம்: சேலம் ஜாகீர்அம்மாப்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி உமாதேவி. இவர்களது மகன் நவீன்குமார் (20). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மற்றும் குழந்தையை விட்டு விட்டு, பிரகாஷ் சென்றுவிட்டார். இதன்பிறகு மகனே வாழ்க்கை என நினைத்துக்கொண்டு உமாதேவி, வீட்டு வேலைக்கு சென்று மகனை வளர்த்தார். 10ம் வகுப்பு வரை படித்துள்ள நவீன்குமார், அதன் …

Read More »

லாரி ஓட்டுநர்களை மிரட்டி லஞ்ச வேட்டை: இன்ஸ்பெக்டர், எஸ்ஐ சஸ்பெண்ட்! டிஐஜி மகேஸ்வரி அதிரடி!!

லாரி ஓட்டுநர்களை மிரட்டி லஞ்ச வேட்டை: இன்ஸ்பெக்டர், எஸ்ஐ சஸ்பெண்ட்! டிஐஜி மகேஸ்வரி அதிரடி!! சேலத்தில், லாரி ஓட்டிகளை மிரட்டி லஞ்சம் வசூலித்த காவல் ஆய்வாளர், சிறப்பு எஸ்ஐ ஆகியோரை சரக டிஐஜி மகேஸ்வரி அதிரடியாக பணியிடைநீக்கம் செய்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர் போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளர் செல்வமணி தலைமையில் காவலர்கள், சேலம் – பெங்களூரு நெடுஞ்சாலையில் செல்லும் கனரக வாகனங்களை நிறுத்தி லஞ்சம் வசூலித்துவருவதாக புகார்கள் கிளம்பின. …

Read More »

தாய் இறந்த வேதனையில் சிறுமி விஷம் குடித்து தற்கொலை!

தாய் இறந்த வேதனையில் சிறுமி விஷம் குடித்து தற்கொலை! கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி அருகே தாய் இறந்த சோகத்தில் 16 வயது சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் உள்ள விளாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். விவசாயி. இவருக்கு வெள்ளையம்மாள் என்ற மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், உடல் நல குறைவால் அவதிபட்டு வந்த வெள்ளையம்மாள், கடந்த சில மாதங்களுக்கு முன்பு …

Read More »

“எதிர்க்கட்சித் தலைவரை அதிமுக எம்.எல்.ஏக்கள்தான் முடிவு செய்வார்கள்” – பா.வளர்மதி

எதிர்க்கட்சித் தலைவரை அதிமுக எம்.எல்.ஏக்கள்தான் முடிவு செய்வார்கள்” – பா.வளர்மதி எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை அதிமுக எம்.எல்.ஏக்கள் தான் முடிவு செய்வார்கள் என்று அக்கட்சியின் மூத்த தலைவரான பா.வளர்மதி தெரிவித்துள்ளார். சேலத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது வளர்மதி இவ்வாறு கூறினார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவராக யார் அமருவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதிமுக தலைமையும் …

Read More »
MyHoster