Breaking News

கடலூர்

கடலூர்

தமிழ்நாட்டில் மொத்தம் 234 சுகாதாரத்துறை அமைச்சர்கள்!

தமிழ்நாட்டில் மொத்தம் 234 சுகாதாரத்துறை அமைச்சர்கள்! தமிழ்நாட்டில் ஒரு சுகாதார அமைச்சர் கிடையாது, 234 சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அரசு மருத்துவமனையில் புதியதாக 30 ஆக்ஸிஜன் படுக்கைகள் கொண்ட இடத்தினை திறந்து வைத்தனர். பின்னர் பேட்டியளித்த அமைச்சர் சுப்பிரமணியன், “விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் …

Read More »

25 கோவில் குளங்கள் நிரம்பியது…

கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக நெல்லிக்குப்பம் பூலோகநாதர், குறிஞ்சிப்பாடி புத்துமாரியம்மன், வடலூர் சத்தியஞானசபை, சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் உள்பட 25 கோவில்களில் உள்ள குளங்கள் தற்போது முழுவதுமாக நிரம்பி உள்ளன. கடலூர்: கடலூர் மாவட்டம் முழுவதும் நிவர் புயல் காரணமாக ஏற்கனவே கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது.   தற்போது உருவான புரெவி புயலால் கடந்த 3 நாட்களாக கனமழை நீடித்து வருகிறது. …

Read More »

வடலூரில் பரபரப்பு: சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை – கணக்கில் வராத ரூ.65 ஆயிரம் பறிமுதல்

வடலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.65 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது…! வடலூர், கடலூர் மாவட்டம் வடலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் கொண்டு வரும் ஆவணங்களை வைத்து பத்திரப்பதிவு செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாகவும், லஞ்சம் கொடுக்காவிட்டால் ஆவணங்களில் கையெழுத்து போடாமல் பொதுமக்களை அலைக்கழித்து வருவதாகவும் பல்வேறு புகார்கள் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு சென்றது. இதன்படி நேற்று மாலை 5.30 மணிக்கு …

Read More »

முடங்கிய கடலூர் மாவட்டம்: சாலைகள் வெறிச்சோடின !!

நிவர் புயலால் கடலூர் மாவட்டம் முடங்கியது. சாலைகள் வெறிச்சோடின. கடலூர், வங்க கடலில் உருவான நிவர் புயல் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் புயல் எச்சரிக்கை பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. புயல் பாதுகாப்பு மையங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. அனைத்து துறை அதிகாரிகளும் முகாமிட்டு பணிகளை துரிதப்படுத்தி வந்தனர். …

Read More »

கடலூரில் முதல்வர் பழனிசாமி ஆய்வு!

கடலூரில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார். நிவர் அதி தீவிர புயல் இன்று அதிகாலை புதுச்சேரி அருகே கரையை கடந்தது. அப்போது மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பொழிந்தது. இதனால் கடலூர் மாவட்டத்தில் ஏராளமான பயிர்கள் சேதமடைந்துள்ளன. புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில், புயல் மற்றும் மழையால் …

Read More »

கடலூர் புயல் சேதப் பகுதிகளை ஆய்வுசெய்ய செல்கிறார் …

சென்னைப்புறநகரான வேளச்சேரி, முடிச்சூர் பகுதிகளிலும், கடலூர் புயல் சேதப் பகுதிகளையும் முதல்வர் பழனிசாமி இன்று நேரில் ஆய்வு செய்கிறார். நிவர் புயல் தாக்கம் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் தாக்கமும், உயிர் சேதமும் ஏற்படுத்தவில்லையெனினும் பயிர்கள் மூழ்கியும், சென்னை புறநகர், கடலூர் பகுதிகளில் பொருட் சேதம் அதிகமாக உள்ளது. இன்று சென்னைப்புறநகரான வேளச்சேரி, முடிச்சூர் பகுதிகளிலும், கடலூர் புயல் சேதப் பகுதிகளையும் முதல்வர் பழனிசாமி இன்று நேரில் ஆய்வு செய்கிறார். வேளாண்துறை …

Read More »

திமுகவின் போலி முகத்தை காட்ட வேல் யாத்திரை !!

தமிழக பாஜகவினர் கடந்த 6-ம் தேதி திருத்தணியில் தொடங்கிய வேல் யாத்திரையை தொடர்ந்து மாவட்டந் தோறும் தடையை மீறி நடத்தி, கைதாகி வருகின்றனர். நேற்று கடலூரில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் வேல் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டது. முன்னதாக நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பாஜக மாநிலத்தலைவர் முருகன் பேசியது: வேல் யாத்திரை அத்தியாவசியமானது. கந்த சஷ்டி கவசத்தை கருப்பர் கூட்டம் கொச்சைப்படுத்தியிருக்கிறது. அந்த கருப்பர் கூட்டத்துக்கு பின்னால் திமுகவும், …

Read More »

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததால் மூன்று காவலர்கள் இடமாற்றம்?

தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன கடலூரில் செப்டம்பர் 17-ம் தேதி தந்தை பெரியார் பிறந்த நாள் அன்று அண்ணா பாலம் அருகில் இருக்கும் அவரது சிலைக்கு புது நகர் காவல்நிலைய காவலர்கள் ரங்கராஜ், ரஞ்சித், அசோக் 3 பேர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அந்த புகைப்படங்களை சமுக வலைதலங்களில் பதிவேற்றினர். இதன் காரணமாக அவர்கள் …

Read More »

ராத்திரி ரவுன்ட்ஸ் நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை…

  புதுகோட்டை மாவட்ட நிருபர் வி .வீரராகவன் எனபவர் சமுகஊடகங்களிள் தனிப்பட்ட முறையில் தவறான பதிவுகள் வெளியிடுவதால் அவரை மாவட்ட செய்தியாளர் பெறுப்புகளில் இருந்து இடைநீக்கம் செய்து ராத்திரி ரவுன்ட்ஸ்  நிர்வாகம் ஒழங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. Share on: WhatsApp

Read More »

இராத்திரி ரவுண்ட்ஸ் -ன் முக்கிய அறிவிப்பு.

இராத்திரி ரவுண்ட்ஸ் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது ராத்திரி ரவுண்ட்ஸ் புலனாய்வு இதழ் மாதம் இரண்டு முறையும்  Youtube Chennal மற்றும்  www.raththirirounds.com இணையதளத்தில் தினசரி செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த தளங்களில் வரும் செய்திகளுக்கு மட்டும் தான் இராத்திரி ரவுண்ட்ஸ் நிர்வாகம் பொறுப்பேற்கும். இது தவிர வேறு தளங்களில் ராத்திரி ரவுண்ட்ஸ் பெயருடனோ அல்லது முத்திரையுடனோ (logo)வுடன் வரும் செய்திகளுக்கு ராத்திரி ரவுண்ட்ஸ் நிர்வாகம் பொறுப்பேற்க்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு …

Read More »
MyHoster