Breaking News
Home / இந்தியா

இந்தியா

இந்தியா

வறுமை பட்டியல் வெளியீடு: பீஹார் மாநிலம் முதலிடம்

புதுடில்லி :’பீஹார், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம் ஆகியவை நாட்டின் மிக ஏழ்மையான மாநிலங்கள்’ என, நிடி ஆயோக் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு திட்டம் மற்றும் ஐ.நா., வளர்ச்சி திட்டம் ஆகியவை வகுத்துள்ள வழிமுறைகளை பின்பற்றி வறுமை குறியீடு பட்டியலை நிடி ஆயோக் முதல்முறையாக வெளியிட்டுள்ளது.       சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கை தரம் ஆகியவற்றின் அடிப்படையில் …

Read More »

அரசியல் சாசனப்படி குடிமக்களின் உரிமைகளை காக்கவேண்டும் : மோடி

புதுடில்லி:அரசியல் சாசனப்படி குடிமக்களின் உரிமைகளை காக்கவேண்டும் என அரசியல் சாசன நாள் விழாவில் பிரதமர் மோடி கூறினார்.     அரசியல் சாசன நாள் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது: மூன்றாம் பாலினத்தவர்களுக்கான உரிமைகளை வழங்கி உள்ள நாடாக திகழ்கிறோம். சமூகத்தில் அனைவருக்கும் சம வாய்ப்புகளை வழங்கி வருகிறோம்.பல பிரச்னைகள் ஏற்பட்ட போதிலும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல அரசிலமைப்பு உதவியது. சுதந்திரத்திற்கு பிறகும் பல ஆண்டுகாலமாக …

Read More »

டிச.,15ல் சர்வதேச விமான போக்குவரத்து துவக்கம்: மத்திய அரசு

புதுடில்லி : கோவிட் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சர்வதேச விமான போக்குவரத்து வரும் டிச.,15 முதல் துவங்கும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கோவிட் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 23ல் சர்வதேச விமானபோக்குவரத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது. இருப்பினும், வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்காக பல கட்டுப்பாடுகளுடன் 28 நாடுகளுக்கு மட்டும் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில், மத்திய விமான …

Read More »

இந்தியாவில் புதுவகை உருமாறிய கொரோனா பாதிப்பில்லை: மத்திய அரசு

புதுடில்லி: தென்ஆப்ரிக்காவில் பி.1.1.529 என்ற புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், இந்தியாவில் இதுவரை இந்த புதுவகை கொரோனா தொற்று பாதிப்பில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் பி.1.1.529 என அடையாளம் காணப்பட்ட புதுவகை உருமாற்ற கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாக அங்குள்ள விஞ்ஞானிகள் அறிவித்தனர். இதனை உறுதிப்படுத்திய உலக சுகாதார அமைப்பு இது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இதனையடுத்து தென்ஆப்ரிக்கா உள்ளிட்ட பிறநாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகளையும் …

Read More »

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 1650 புள்ளிகள் சரிவு

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று(நவ., 26) கடும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 1650 புள்ளிகள் வீழ்ச்சி கண்டன. புதிதாக கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ் மீதான அச்சம் மற்றும் முன்னணி நிறுவன பங்குகள் பெருமளவில் சரிந்ததால் இன்றைய வர்த்தகம் கடும் வீழ்ச்சியை சந்தித்ததாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 800 புள்ளிகள் சரிவுடன் துவங்கியது. தொடர்ந்து சரிந்து கொண்டே போன …

Read More »

நவ.,26: பெட்ரோல், டீசல் விலையில் 23வது நாளாக இன்றும் மாற்றமில்லை

சென்னை: மத்திய அரசின் கலால் வரி குறைப்பால், தீபாவளிக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும்; டீசல் 10 ரூபாயும் குறைந்த நிலையில், கடந்த 23 நாட்களாக அவற்றின் விலை மாற்றப்படாமல் உள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால், எப்போதும் இல்லாத வகையில், பெட்ரோல், டீசல் …

Read More »

இது உங்கள் இடம்: பிரதமர் மோடிக்கு இது வீழ்ச்சி அல்ல!

ச.பிரசன்னா, சென்னையிலிருந்து அனுப்பிய, ‘இ -மெயில்’ கடிதம்: வேளாண் மசோதாக்களை திரும்பப் பெறும் முடிவை, பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். இரண்டாம் பசுமைப் புரட்சியை காணும் வாய்ப்பை, விவசாயிகள் இழந்துள்ளனர். ‘உழுபவனுக்கு, விளை பொருளுக்கு விலையை நிர்ணயிக்கும் உரிமையைக் கொடு’ என வாய் கிழியப் பேசியோர், அந்த உரிமையை தந்த சட்டத்தை திரும்பப் பெற போராடியது, ஒரு, ‘டிராஜடி!’ எதிர்க்கட்சிகள் செய்த அரசியலால், போலி விவசாயிகள் நடத்திய போராட்டத்தால், ஒரு நல்ல …

Read More »

மழைநீர் குழாயில் மழை போல் விழுந்த பணம்; கர்நாடக பொறியாளர் வீட்டில் கத்தை கத்தையாய் பறிமுதல்

பெங்களூரு: கர்நாடகாவில் பொதுப்பணித்துறை பொறியாளர் வீட்டில் லஞ்சஒழிப்புத்துறை நடத்திய சோதனையில், மழைநீர் குழாயில் இருந்து மழை போல் பணம் விழுந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை 15 அரசு அதிகாரிகளை குறிவைத்து 60க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டது. இதில், கர்நாடக மாநில பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவரின் வீடும் அடங்கும். சாந்த கவுடா என்னும் அந்த பொறியாளரின் வீட்டில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரிடம் …

Read More »

இந்தியாவில் கோவிட் சிகிச்சையில் 1.11 லட்சம் பேர்

புதுடில்லி: இந்தியாவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 1.11 லட்சமாக குறைந்தத. கடந்த 537 நாளில் இதுவே மிகக்குறைவாகும். இந்தியாவில் நேற்றைய (நவ.,23) கோவிட் நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 98.33 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.35 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 0.32 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். …

Read More »

இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இயக்கப்பட்டது ‘போயிங் மேக்ஸ்’ விமானம்

புதுடில்லி: சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, ‘போயிங் 737 மேக்ஸ்’ விமானம், இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இயக்கப்பட்டது. முதல் விமானத்தில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் சிந்தியா பயணம் மேற்கொண்டார். அமெரிக்காவைச் சேர்ந்த ‘போயிங்’ நிறுவனம் தயாரிக்கும் 737 மேக்ஸ் ரக விமானம், 2019ல் எத்தியோப்பியாவில் விபத்தில் சிக்கியது. அதில், நான்கு இந்தியர் உட்பட, 157 பேர் உயிரிழந்தனர். தொழில்நுட்பக் கோளாறு …

Read More »
MyHoster